Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சில தலங்களில் மட்டும் நவக்கிரகம் ... ஐஸ்வர்யம் தரும் ஆடிப்பெருக்கு ஐஸ்வர்யம் தரும் ஆடிப்பெருக்கு
முதல் பக்கம் » துளிகள்
கல்யாண வரம் தரும் ஆண்டாள்
எழுத்தின் அளவு:
கல்யாண வரம் தரும் ஆண்டாள்

பதிவு செய்த நாள்

01 ஆக
2020
06:08

புதுச்சேரி அருகிலுள்ள நல்லாத்துார் வரதராஜப் பெருமாள் கோயில் ஆண்டாள் மாலையை வீட்டில் வைத்து   வழிபட்டாலும், தாயாருக்கு வெள்ளிக்கிழமை அர்ச்சனை  செய்தாலும் கல்யாண வரம் கிடைக்கும்.
500 ஆண்டுகளுக்கு முந்திய இக்கோயில் இரண்டாம் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்டது. சுவர்ணபுரி என்னும் பெயர் கொண்ட இத்தலம் தற்போது நல்லாத்துார் என அழைக்கப்படுகிறது.  பிருகு முனிவரின் மகளாக அவதரித்த மகாலட்சுமி இத்தலத்தில் வரதராஜப் பெருமாளை மணம் புரிந்தாள்.  கடலுார் அருகிலுள்ள திருவஹிந்திரபுரம் தேவநாத பெருமாள் கோயிலுக்கு அபிமானத்தலமாக விளங்குகிறது.
தென்பெண்ணை, சங்கராபரணி நதிகளுக்கு நடுவில் உள்ள இத்தலத்தில் வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். பெருமாளைக் கைபிடித்த மகிழ்ச்சியில் பெருந்தேவித் தாயார் புன்சிரிப்புடன் தனி சன்னதியில் இருக்கிறாள்.
  அவதார காலம் முடிந்து வைகுண்டம் கிளம்பிய ராமர், சீதையுடன் இங்கு சிலகாலம் தங்கியிருந்தார். அர்த்த மண்டபத்தில் சீதாராமர் சன்னதி உள்ளது. ராமர் முழங்கால், இடுப்பு, கழுத்து என மூன்றையும் வளைத்தபடி சீதையுடன் ஒயிலாக நிற்கிறார். அருகில் இடக்கையில் சூரியக்கொடி ஏந்தியும், வலக்கையால் வாய் பொத்தியும் அனுமன் இருக்கிறார்.
  ஆதிலட்சுமி நாராயணர் சன்னதியில் திருமங்கையாழ்வார், வேதாந்த தேசிகன் உள்ளனர். கருவறை எதிரில் அஷ்ட நாக ஆபரணம் அணிந்த கருடாழ்வார் உள்ளார். சுவாதி நட்சத்திரத்தன்று இவரை மாணவர்கள் எட்டு முறை வலம் வந்து வழிபட கல்வியில் முன்னேற்றம் காண்பர். அனுமன் ஜெயந்தி, கார்த்திகை மாத ஞாயிறன்று அனுமனுக்கு அபிேஷக அலங்காரம் சிறப்பாக நடக்கும்.     
 பெருந்தேவி தாயாருக்கு வெள்ளிக்கிழமை காலையில் திருமஞ்சனம், மாலையில் விசேஷ அர்ச்சனை நடக்கும். இதில் பங்கேற்றால் திருமணத்தடை நீங்கும். மார்கழி மாத கடைசிநாளான போகியன்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடக்கும். அதில் பங்கேற்று ஆண்டாள் மாலையை வாங்கிச் செல்வோருக்கு கல்யாண வரம் கிடைக்கும்.
எப்படி செல்வது
புதுச்சேரி – கடலுார் சாலையில் தவளக்குப்பத்தில் இருந்து 7 கி.மீ.,
விசேஷ நாட்கள்: ஆடிப்பூரம், அனுமன் ஜெயந்தி, போகி, ஸ்ரீராமநவமி
நேரம்:  காலை 7:00 – 11:00 மணி, மாலை 4:00 – 8:30 மணி
தொடர்­புக்கு: 98941 99562, 98430 61474

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar