பதிவு செய்த நாள்
15
செப்
2020
03:09
அயோத்தி மன்னர் தசரதர் பிள்ளைப்பேறு வேண்டி யாகம் நடத்தினார். அதன் பயனாக கிடைத்த பாயாசத்தை குடித்ததால், மகாராணிகளான கோசலைக்கு ராமனும், கைகேயியிக்கு பரதனும், சுமித்ரைக்கு லட்சுமணன், சத்ருக்கனன் பிறந்தனர். இந்த நால்வரின் பிறப்புக்கு சாஸ்திர ரீதியாக காரணம் ஒன்றுண்டு.
ஒரு மகன் மட்டும் பெற்றால் அவன் கயா ேக்ஷத்திரத்தில் தன் காலத்திற்குப் பிறகு பிதுர் தர்ப்பணம் செய்வானோ மாட்டானோ என்ற சந்தேகம் தசரதருக்கு இருந்தது. கயாவில் பிதுர்க்கடன் செய்வது விசேஷம் என்பதால் ஒரு மகன் இல்லாவிட்டால் இன்னொரு மகனாவது தனக்குப் பிண்டம் இடுவான் என நினைத்தார். அதற்காகவே ஒன்றுக்கு நான்காக பிள்ளைகள் இருக்கட்டும் என அவர் முடிவெடுத்தார்.
ராமாயண காலத்திற்கு முன்பே முன்னோருக்கு தர்ப்பணம் அவசியம் என்பதும், அதை கயாவில் செய்வது சிறப்பு என்பதும் ஒரு மகன் செய்யாவிட்டாலும் இன்னொருவனாவது பிதுர்க்கடன் செய்ய வேண்டும் என்பதும் தெரிகிறது. தசரதருக்கு அந்திம சடங்குகளை செய்தது நான்காவது மகனான சத்ருக்கனனே. ராம, லட்சுமணர் காட்டிற்கு சென்றதாலும், கைகேயி பெற்ற வரத்தால் பரதனுக்கும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. 14 ஆண்டுக்குப் பின் அயோத்தி வந்த ராமருக்கு பட்டாபிேஷகம் நடந்தது. அதன் பின்னர் கயாவில் தந்தைக்கு தர்ப்பணம் செய்தார்.