Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பணமும் நீண்ட ஆயுளும் பெற... கோயிலுக்குச் செல்லும் முன் கவனிக்க... கோயிலுக்குச் செல்லும் முன் ...
முதல் பக்கம் » துளிகள்
கேட்ட வரம் தரும் தவசிலிங்கம்
எழுத்தின் அளவு:
கேட்ட வரம் தரும் தவசிலிங்கம்

பதிவு செய்த நாள்

29 செப்
2020
04:09

விருதுநகர் மாவட்டம் அழகாபுரி அருகிலுள்ள மூளிப்பட்டியில் தவசிலிங்க சுவாமி குடிகொண்டிருக்கிறார். கேட்ட வரம் தரும் இவரை பவுர்ணமி நாளில் தரிசிப்பது சிறப்பு.  

500 ஆண்டுக்கு முன் மன்னர் ஆட்சி காலத்தில் ‘மூளிப்பட்டி’ என்னும் இப்பகுதி புதராக இருந்தது. அரண்மனை பசுக்கள் தினமும் மேய்ச்சலுக்கு வந்த சமயத்தில் ஒரு பசு மட்டும் பால் தர மறுத்தது. அதை கண்காணிக்கும்படி மன்னர் உத்தரவிட, குறிப்பிட்ட இடத்தில் பசு பால் சொரிவதை பணியாட்கள் கண்டனர்.


புதரை தோண்ட முயன்ற போது ரத்தம் பீறிட, அங்கு சிவலிங்கம்  இருப்பதைக் கண்டனர். மன்னர் உத்தரவால் மண்கோட்டை எழுப்பப்பட்டு தவசிலிங்க சுவாமி என்னும் பெயரில் வழிபடத் தொடங்கினர்.மன்னர், ஜமீன்தார்களால் திருப்பணி செய்யப்பட்ட இக்கோயிலில் 1996, 2008 ஆண்டுகளில் கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் குலதெய்வக் கோயிலான இங்கு திருப்பணி நடத்தப்பட்டு 2020 ஆக.28ல் கும்பாபிேஷகம் நடந்தது. கருங்கல்லால் ஆன கருவறையில் தவசிலிங்க சுவாமியும், அவருக்கு பின்புறம் பூர்ணகலா, புஷ்கலாவுடன் அய்யனார் அமர்ந்த கோலத்தில் அருள்புரிகிறார். இந்த அமைப்பை வேறெங்கும் காண முடியாது. பிரகாரத்தில் பைரவர், வேட்டை கருப்பசாமி, கன்னிமார், கண்திருஷ்டி விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் என 32 சன்னதிகள் உள்ளன. தலையில் கங்கை வழிந்தோடும் நிலையில் 12 அடி உயர சிவபெருமான் தியான நிலையில் காட்சி தருகிறார். இங்கு ஒருமுறை வந்தாலும் எதிர்பார்ப்பு நிறைவேறும். மனக்கஷ்டம் பஞ்சாக பறந்தோடும்.   


எப்படி செல்வது: விருதுநகர்– அழகாபுரி  சாலையில்  16 கி.மீ.,

விசேஷ நாட்கள்: பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம், கிருத்திகை, சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி

தொடர்புக்கு : 99949 52322 ,82481 38143

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar