சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
செல்வத்து உடற்பிறவி யான்வேண்டேன்ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறமல்லால்கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்துகோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே. ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழவானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்தேனார்பூஞ் சோலைத் திருவேங்கடச் சுனையில்மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே. பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும்துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல்மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவேன் ஆவேனே. ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்குபண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துசெண்பகமாய் நிற்கும் திருவுடையேன் ஆவேனே. கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்துஇன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன்எம்பெருமான் ஈசன் எழில்வேங் கடமலைமேல்தம்பகமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே. மின்னனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும்அன்னவர்தம் பாடலொடும் ஆடலவை ஆதரியேன்தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்அன்னனைய பொற்குடவாம் அருந்தவத்தன் ஆவேனே. வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்கானாறாய்ப் பாயும் கருத்துடையேன் ஆவேனே. பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்வெறியார் தண்சோலைத் திருவேங் கடமலைமேல்நெறியாய்க் கிடக்கும் நிலையுடையேன் ஆவேனே. செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!நெடியானே! வேங்கடவா! நின்கோயிலின் வாசல்அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே. உம்பர் உலகாண்டு ஒருகுடைக்கீழ் உருப்பசிதன்அம்பொற் கலையல்குல் பெற்றாலும் ஆதரியேன்செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே. மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்தன்பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சிகொன்னவிலும் கூர்வேல் குலசேகரன் சொன்னபன்னியநுால் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே.