சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னிவழுஇலா அடிமை செய்ய வேண்டும்நாம்தெழிகுரல் அருவித் திருவேங்கடத்துஎழில்கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்முந்தை வானவர் வானவர் கோனொடும்சிந்து பூமகிழும் திருவேங்கடத்துஅந்தமில் புகழ்க் கார்எழில் அண்ணலே.அண்ணல் மாயன் அணிகொள் செந்தாமரைக்கண்ணன் செங்கனிவாய்க் கருமாணிக்கம்தெண்ணி றைசுனை நீர்த்திரு வேங்கடத்துஎண்ணில் தொல்புகழ் வானவர் ஈசனே.ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அதுதேசமோ திருவேங்கடத் தானுக்குநீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண்பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே. சோதியாகி எல்லா உலகும் தொழும்ஆதி மூர்த்தி என்றால் அளவு ஆகுமோவேதியர் முழு வேதத்து அமுதத்தைத்தீதுஇல் சீர்த்திரு வேங்கடத் தானையே வேங்கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்வேங்கடத்துஉறை வார்க்கு நமஎன்னல்ஆஅங் கடமை அதுசுமந் தார்கட்கே.சுமந்து மாமலர் நீர்சுடர் துாபம் கொண்டுஅமர்ந்து வானவர் வானவர் கோனொடும் நமன்று எழும் திருவேங்கடம் நங்கட்குச்சமன்கொள் வீடுதரும் தடங் குன்றமே.குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்சென்று சேர்திரு வேங்கட மாமலைஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே.ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணிவீயுமாறு செய்வான் திருவேங்கடத்து ஆயன் நாள் மலராம் அடித் தாமரைவாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று எய்த்து இளைப்பதன் முன்னம் அடைமினோ பைத்த பாம்பணை பொன்திரு வேங்கடம்மொய்த்து சோலைமொய் பூந்தடந் தாள்வரே. தாள்பரப்பி மண் தாவிய ஈசனை நீள்பொழிற் குருகூர்ச் சடகோபன் சொல் கேழ்இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே.