பூமியில் உயிர்கள் வாழ ஒளி அவசியம். பகலில் சூரியன், இரவில் நிலவும் ஔி தருகின்றன. சூரியன் உஷ்ணமும், நிலா குளிர்ச்சியும் அளிப்பதால் சமமான தட்பவெப்பத்தில் உயிர்கள் வாழ முடிகிறது. சூரிய, சந்திர இயக்கத்தின் அடிப்படையில் நாள், மாதம், ஆண்டு என காலம் கணிக்கப்படுகிறது. இருவரும் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் போது சூரியனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். ‘அமாவாசை’ என்னும் அந்த நாளில் குலதெய்வம், முன்னோரை வழிபட்டால் குலம் தழைத்து நல்வாழ்வு அமையும்.