தெற்கு திசையின் அதிபதி எமதர்மனை தனிப்பட்ட முறையில் வழிபடும் வழக்கமில்லை. எமன் வழிபட்ட சிவத்தலங்களை தரிசித்தால் போதும். மயிலாடுதுறை அருகேயுள்ள தருமபுரம் சிவன் கோவில், நாகை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில், திருவாரூர் மாவட்டம் திருவாஞ்சியம் வாஞ்சிநாதேஸ்வரர் கோயில்கள் சிறப்பானவை. சனிக்கிழமைகளில் இங்கு வழிபட ஆயுள் பெருகும்.