பதிவு செய்த நாள்
18
டிச
2020
12:12
* சனிக்கிழமையில் விரதமிருந்து சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம், எள்தீபம் ஏற்றுதல்
* சனீஸ்வரருக்கு எள்ளுச்சாதம் நைவேத்தியம் செய்து காகத்திற்கு படைத்தல்
* மகாபிரதோஷத்தன்று சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை
* வன்னிமரம் அல்லது வன்னிமரத்தடி விநாயகரை சனிக்கிழமையில் வழிபடுதல்
* சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு எட்டு தேங்காய் உடைத்தபின் நெய்தீபம் ஏற்றுதல்
* சனியின் பார்வையில் இருந்து தப்பித்தவர்கள் விநாயகர், ஆஞ்சநேயர். இவர்கள் இருவரும் இணைந்த கோலமான ஆத்யந்தபிரபுவை (கடைகளில் இந்த படம் கிடைக்கும்) வழிபட்டால் நன்மை உண்டாகும்.
* விஷ்ணு சகஸ்ர நாமம், அனுமன் சாலீஸா படித்தல்
* நளபுராணம், திருநள்ளாற்று பதிகம் படித்தால் சனி தோஷம் குறையும்.
* ஏழைகளுக்கு நல்லெண்ணெய், உளுந்து, இரும்புச்சட்டியை தானம் செய்தல்
* பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர நாட்களில் அன்னதானம் செய்தல்
* மாற்றுத் திறனாளிகளுக்கு பொருளுதவி செய்தல்
* சனீஸ்வரர் நீதிமான் என்பதால் ஒழுக்கம், தர்மம், நீதி, நியாயத்தை பின்பற்றுவோரை தண்டிக்க விரும்ப மாட்டார்.
* தென்னிந்தியாவில் சனிக்கு காகமும், வடஇந்தியாவில் கழுகும் வாகனமாக உள்ளன.
* சனியைப் போல் கொடுப்பவருமில்லை, சனியைப் போலக் கெடுப்பவருமில்லை என்றொரு பழமொழி உண்டு.