எள்ளில் இருந்து வரும் நெய் என்பதால் ‘எண்ணெய்’ எனப்பட்டது. எள்+நெய் என்பதே எண்ணெய். திலம் என்றால் எள். இதனால் தைலம் என்றும் பெயருண்டு. எண்ணெய்களில் இதற்கே முதலிடம் என்பதால் ‘நல்லெண்ணெய்’ என சிறப்பாக சொல்கிறோம். எல்லா தெய்வ வழிபாட்டிற்கும் ஏற்றது இது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு எண்ணெய் என்பது பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட விஷயம்.