கிரகங்களில் புதனுக்குரிய தலம் திருவெண்காடு. இங்குள்ள சிவனுக்கு சுவேதாரண்யேஸ்வரர் என்றும். அம்மனுக்கு பிரம்ம வித்யாம்பிகை என்றும் பெயர். இங்கு மாசிமகத்தன்று விசேஷ பூஜை நடக்கும். அழகும், புத்திசாலித்தனமும் நிறைந்த குழந்தைகள் பிறக்க வேண்டி புதுமணத்தம்பதிகள் இங்குள்ள சூரிய, சந்திர, அக்னி தீர்த்தங்களின் நீரை தலையில் தெளித்து வழிபடுகின்றனர்.