கேரளமாநிலம் கொடுங்கல்லுார் பகவதியம்மன் கோயிலில் உள்ள ஒரு அரசமரத்தின் கீழ் ‘தவிட்டு முதியம்மன்’ என்ற பெயரில் அம்பிகை அருள்பாலிக்கிறாள். இவள் மீது அரிசியுடன் தவிடு கலந்து துாவி வழிபடும் பழக்கம் உள்ளது. கால்நடை வளர்ப்போர் இந்த அம்மனை வழிபட்டால் பசுக்கள் அதிகம் பால் சுரப்பதோடு நோயின்றி நீண்டகாலம் வாழும் பாக்கியம் கிடைக்கும்.