Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

சூரியன் ருசிகரத் தகவல்கள் டும்...டும் ஒலிக்க நந்தி கல்யாணம் ...
முதல் பக்கம் » துளிகள்
அங்கவஸ்திரம் இல்லாத பெருமாள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2021
11:03

கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டம் திருவல்லா திருவாழ்மார்பன் கோயிலில் அங்கவஸ்திரம் அணியாத நிலையில் பெருமாள் பிரம்மச்சாரி கோலத்தில் இருக்கிறார். ஆண்டுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே பெண்கள் இவரை தரிசிக்க கருவறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 


கேரளாவிலுள்ள சங்கரமங்கலம் கிராமத்தில் சங்கரமங்கலத்தம்மையார் என்னும் பெண் பக்தை வாழ்ந்தார். இவர் ஏகாதசியன்று விரதமிருந்து பெருமாளை தரிசித்து மறுநாள் துவாதசியன்று துறவிகளுக்கு அன்னதானம் செய்வது வழக்கம். கோயிலுக்கு வரும் வழியிலுள்ள காட்டில் தோலாகாசுரன் என்பவன் அம்மையாருக்கு இடையூறு செய்து வந்தான். இது குறித்து பெருமாளிடம் ஒருமுறை முறையிட்டார்.
அம்மையார் கோயிலுக்குச் செல்லும் வழியில் பிரம்மச்சாரி இளைஞன் ஒருவன் அசுரனுடன் போரிடுவதைக் கண்டார். அவனைக் கொன்றதும் பிரம்மச்சாரி அங்கிருந்து மறைந்தார். பின் கோயிலுக்கு வந்த போது, காட்டில் பார்த்த பிரம்மச்சாரி இளைஞனின் கோலத்தில் பெருமாள் இருப்பதைக் கண்டார். பெருமாளே தனக்காக போரிட்டதை எண்ணி நெகிழ்ந்தார். பிரம்மச்சாரி இளைஞர்கள் அங்கவஸ்திரம் அணியாததன் அடையாளமாக இங்கு மேலாடை இன்றி காட்சியளிக்கிறார். அவரது மார்பில் திரு (லட்சுமி) குடியிருப்பதால் ‘திருவாழ்மார்பன்’ எனப்படுகிறார். பெருமாளின் திருவடி தரிசனம் போல இங்கு மார்பு தரிசனம் சிறப்பாக கருதப்படுகிறது.
சங்கரமங்கலத்தம்மையார் தானம் அளித்த போது, பெருமாளும் பிரம்மச்சாரியாக வந்து உணவை ஏற்று மகிழ்ந்தார். ஏகாதசி விரதம் முடித்து அம்மையார் சாப்பிட வைத்திருந்த உப்பு மாங்காயை அவர் கேட்கவே கமுகு இலையில் மாங்காயை வைத்து கொடுத்தார். இதனடிப்படையில் தினசரி பூஜையில் கமுகு இலையில் சாதம், உப்புமாங்காய் நைவேத்யம் செய்கின்றனர்.  செல்வத்திருக்கொழுந்து நாச்சியார் தனி சன்னதியில் இருக்கிறார்.

பெருமாள் பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்வதால் மார்கழித் திருவாதிரை, சித்திரை விஷு தவிர்த்த மற்ற நாட்களில் கருவறையில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. சன்னதிக்கு வெளியில் மட்டுமே நின்று  தரிசிக்கலாம். மார்கழி திருவாதிரையன்று சிவபெருமான் இவரைக் காண வந்ததன் அடிப்படையில் சந்தனம், விபூதி தரப்படுகிறது. இவரை வழிபட்டால் செல்வ வளம் பெருகும். பெருமாளுக்கு எதிரில் தங்க கவசத்துடன் கருடாழ்வார்  50 அடி உயர கல் துாண் மீது பறக்கும் நிலையில் உள்ளார்.  பக்தர்கள் வேண்டுதல் வைத்ததும் பெருமாளை சுமந்து செல்ல தயார் நிலையில் கருடன் இப்படி நிற்கிறார். குழந்தை இல்லாதவர்கள் கதகளி நடனம் நடத்துவதாக வேண்டிக் கொள்கின்றனர். அதற்காக ‘கலாக்ஷேத்ரா’ என்னும் நடனக்குழு இங்குள்ளது.


எப்படி செல்வது:
கேரளா பத்தனம்திட்டையில் இருந்து 27 கி.மீ., துாரத்தில் திருவல்லா.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar