Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

அங்கவஸ்திரம் இல்லாத பெருமாள் தேரோட்டம் நடத்துவதன் நோக்கம் என்ன?
முதல் பக்கம் » துளிகள்
டும்...டும் ஒலிக்க நந்தி கல்யாணம் பாருங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2021
11:03

நாளாம் நாளாம் திருநாளாம் என திருமண நாளுக்காக ஏங்கும் கன்னியர் ஏராளம். இவர்களின் மனக்குறை போக்க அரியலுார் மாவட்டம் திருமழபாடி கோயிலில் உள்ள நந்தீஸ்வரரும், சுயசாம்பிகை அம்மனும் காத்திருக்கின்றனர். இங்கு பங்குனி புனர்பூசத்தன்று (மார்ச் 23) திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.


திருவையாறில் வசித்த சிலாத முனிவர் குழந்தை பாக்கியம் வேண்டி தவமிருந்தார். ‘‘முனிவரே! புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்’’ என அசரீரி கேட்டது. யாகத்தை நடத்த நிலத்தை சீர்படுத்திய போது பெட்டி ஒன்று பூமிக்கடியில் கிடைத்தது. அதில் மூன்று கண்கள், நான்கு தோள்கள், சந்திரனை அணிந்த முடியுடன் ஒரு குழந்தை இருந்தது. திகைப்புடன் பெட்டியை மூடி மீண்டும் திறந்த போது அழகிய ஆண் குழந்தையாக மாறியது. அப்போது வானில் ‘‘ 16 ஆண்டுகள் மட்டுமே குழந்தை உமது பிள்ளையாக இருக்கும்’’ என அசரீரி கேட்டது.  ஜபேசன் என பெயரிட்டு குழந்தை வளர்த்தார்.  பதினான்காம் வயதில் சிலாதரின் மூலம் உண்மையை அறிந்த ஜபேசர் திருவையாறு கோயில் குளத்தில் ஒற்றைக்காலில் நின்று தவமிருக்கத் தொடங்கினார். தண்ணீரில் வாழும் உயிர்களால் இடையூறு ஏற்பட்டும் தவத்தை விடவில்லை. இவரது பக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் நீண்ட காலம் வாழும் பாக்கியத்தை வழங்கினார்.  அதன் பின் ஜபேசருக்கும், சுயசாம்பிகை என்னும் பெண்ணுக்கும் திருமழபாடி கோயிலில் திருமணம் நடந்தது. அதன் பிறகு கயிலாயத்தின் பிரதான வாயில் காவலர் என்னும் பதவியும், நந்தீஸ்வரர் என்னும் பட்டமும் கிடைக்கப் பெற்றார்.
‘நந்தி திருமணத்தை தரிசித்தால் முந்தி திருமணம் நடக்கும்’ என்ற பழமொழி உண்டு. கன்னியர், இளைஞர்கள் பங்குனி புனர்பூசத்தன்று இங்கு சுவாமியை ஒருமுறை தரிசித்தாலே நற்பலன் கிடைக்கும். ஒரே கல்லால் ஆன சோமாஸ்கந்தர் தனி சன்னதியில் இருக்கிறார். பாலாம்பிகை, சுந்தராம்பிகை என இரு அம்மன் சன்னதிகள் உள்ளன. பிரம்மனுக்கு எதிரில் வேதங்கள் நான்கு நந்திகளாக உள்ளன. சிவனுக்கும் நந்திக்கும் நடுவிலுள்ள மூன்று குழிகளை நவக்கிரகங்களாக கருதி பக்தர்கள் தீபமேற்றுகின்றனர். வைகாசி விசாகத்தன்று மார்க்கண்டேய முனிவர் மழுவேந்திய கோலத்தில் சிவன் காட்சி தருகிறார். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்கின்றனர். கடும் ஜுரத்தால் பாதிக்கப்பட்டோர் ஜுரஹர தேவருக்கு புழுங்கல் அரிசியில் ரசம் சாதம் படைத்து வழிபடுகின்றனர்.
எப்படி செல்வது
* தஞ்சாவூரில் இருந்து 25 கி.மீ.,
* லால்குடியிலிருந்து 35 கி.மீ..
* அரியலுாரில் இருந்து 22 கி.மீ.,

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar