காஞ்சிபுரம் அருகிலுள்ள குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் கோயிலில் உள்ள இறையார் வளையம்மை இடது கையில் மட்டும் வளையல் அணிந்த கோலத்தில் காட்சி தருகிறாள். தன்னை வேண்டுபவர்களின் கோரிக்கைகளுக்கு வளைந்த கொடுத்து செல்பவள் என்பதால் இப்பெயர் பெற்றாள். புதுப்பெண்கள் அம்பாளுக்கு வளையல் அணிவித்து, பூஜித்து பின்னர் அதனை தாங்கள் அணிவித்துக் கிடைக்குமென்றும், சுகப்பிரசவம் ஆகும் என்பதும் நம்பிக்கை. வாலி, இந்திரன், எமன் ஆகிய மூவரும் தங்களது தோஷம் நீங்குவதற்காக குரங்கு, அணில் மற்றும் காகத்தின் வடிவில் வந்து வழிபட்ட தலம் இது. இச்சிலையை அமைத்த சிற்பி அம்பாளின் இடது கையில் மட்டுமே வளையல் அணிவித்து செதுக்கியிருக்கிறார். இதற்கான காரணம் தெரியவில்லை.