நிம்மதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம் பெற என்ன செய்யலாம்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2021 05:05
இவற்றில் ஒன்று இருந்தாலும் மற்றவை தானாக வந்து விடும். நம்மைச் சுற்றி பிடிக்காத நிகழ்வுகள் நடக்கத் தான் செய்யும். அதைப் பற்றி சிந்திக்காமல் விலகி நிற்கப் பழகுங்கள். பிடித்த சூழலை உருவாக்கி மனதை உற்சாகப்படுத்துங்கள். அதிகாலையில் படுக்கையில் இருந்து எழுந்து சிறிது நேரம் பத்மாசனத்தில் அமர்ந்து மூச்சுப்பயிற்சியில் ஈடுபடுங்கள். இஷ்ட தெய்வத்தை நினைத்து ஐந்து நிமிடம் தியானம் செய்யுங்கள். அப்போது, ‘‘நான் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் உடல் நலமாக இருக்கிறது’’ என மனதிற்கு எடுத்துச் சொல்லுங்கள். நிம்மதிக்கான அத்தனை கதவுகளும் ஒவ்வொன்றாக திறப்பதைக் காண்பீ்ர்கள்.