விஷ்ணுவின் அடியவர்களான பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர் பெரியாழ்வார். ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருடனின் அம்சமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தார். இவரது இயற்பெயர் விஷ்ணு சித்தர். ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டிருக்கும் வடபத்ரசாயி பெருமாளுக்கு பூமாலை சாற்றுவதைக் கடமையாகக் கொண்டிருந்தார். ஆண்டாளின் வளர்ப்பு தந்தையான இவர், ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஆண்டாளை மணம் முடித்துக் கொடுத்ததால் அரங்கனுக்கே மாமனாராகும் பாக்கியம் பெற்றார். இவரது திருநட்சத்திரம் ஜூன் 21ல் வருகிறது.