பதிவு செய்த நாள்
06
செப்
2021
12:09
விழுப்புரத்திற்கு அருகிலுள்ள சிந்தாமணிநல்லுாரில் உள்ள வைத்தீஸ்வரரை ஒருமுறை தரிசித்தாலும் போதும்... நீங்கள் சிரமமான நிலையில் இருந்தாலும் அதிலிருந்து விடுபடுவீர்கள். உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிறவிப்பிணியைப் போக்கும் இவரை பவுர்ணமி நாளில் வழிபடுவது சிறப்பு.
900 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆண்ட மன்னர் விக்ரம சோழன் தன் பெற்றோரின் நினைவாக இங்கு சிவன் கோயில் கட்டினார். சோழனின் தாயான சிந்தாமணியின் பெயரால் இத்தலம் சிந்தாமணிநல்லுார் எனப்படுகிறது. இங்கு ருத்ராட்சம், சிவாயநம என்னும் மந்திரம், திருநீறு ஆகிய மூன்றாலும் பக்தர்களின் பிறவி என்னும் நோயைப் போக்குபவராக சிவன் இருப்பதால் வைத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இதனால் ‘மணி மந்திர மருந்து’ என போற்றப்படுகிறார்.
பெரிய பாணமும், வட்ட வடிவ ஆவுடையும் கொண்ட சிவலிங்கமாக மூலவர் இருக்கிறார். கிழக்கு நோக்கிய இவரை வழிபட்டால் உடல், மன நோய்கள் தீரும். கருவறையின் இருபுறங்களில் துவாரபாலகர்களாக விநாயகர், சுப்பிரமணியர் உள்ளனர். தெற்கு நோக்கியபடி தையல்நாயகி அம்மன் சன்னதி உள்ளது. ‘தைல நாயகி’ என்றும் பெயருண்டு. நாயன்மாரான சேரமான் பெருமாள்நாயனார் பாடிய பொன் வண்ணத்தந்தாதியில் இக்கோயில் பற்றிய குறிப்புகள் உள்ளன.
நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பைரவரர் சன்னதிகள் உள்ளன. இவர்களின் சிலை சோழர் கால பாணியில் 5 அடி உயரம் கொண்டதாக உள்ளன. 110 கிலோ எடையுள்ள வெண்கல மணி 30 அடி உயரமுள்ள துாண்களின் நடுவில் கட்டப்பட்டுள்ளது. நான்கு கால் கல்மண்டபத்தில் நந்தீஸ்வரரும், நின்ற கோலத்தில் ஏழு அடி உயரத்தில் பிரசன்ன ஆஞ்சநேயரும் உள்ளனர். கோயிலின் வடகிழக்கு மூலையில் அரசும், வேம்பும் இணைந்து வளர்ந்துள்ளன. ஓம் சத்சித் பெருமான் என்னும் சித்தருக்கு சன்னதி இங்குள்ளது.
எப்படி செல்வது: விழுப்புரம் - திண்டிவனம் நெடுஞ்சாலையில் 6 கி.மீ.,