Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஒருமுறை தரிசித்தாலும் போதும் எதிரி தொல்லை நீக்கும் சிந்தாமணி ...
முதல் பக்கம் » துளிகள்
திருமண யோகம் தரும் தரும் ஸ்ரீநிவாசப் பெருமாள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 செப்
2021
01:09


திருமண யோகம் தரும் ஸ்ரீநிவாசப் பெருமாள் திருச்செந்துார் அருகிலுள்ள புன்னைநகரில் குடி கொண்டிருக்கிறார். இவரை புதன், வெள்ளிக்கிழமைகளில் தரிசித்தால் திருமண யோகம் அமையும்.  
பசுக்கள் மேயும் புன்னை வனமாக இருந்ததால் இப்பகுதி ‘புன்னையடி’ எனப் பெயர் பெற்றது. பெருமாளுக்கும் புன்னை மரத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் தல விருட்சம் புன்னை மரம். கோயில்
திருவிழாக்களில் 9ம் நாளன்று  புன்னைமர வாகனத்தில் பெருமாள் எழுந்தருள்வார். அதன் அடிப்படையில் இங்கு கோயில் கட்டப்பட்டது. தினமும் காலையில் பெருமாளை வழிபடும் விதத்தில் சூரியன் கதிர்களை சுவாமியின் மீது விழுகிறது. தாமிரபரணி ஆற்றங்கரையில் சோலைக்கு நடுவே கோயில் உள்ளது.
 23 ஆயிரம் சதுரடி பரப்பில் மயன் சாஸ்திரப்படி கட்டப்பட்ட கோயில் இது. கோயிலுக்குள் நுழைந்ததும் ராஜ கணபதி தரிசனம் தருகிறார். கருவறையில்  பெருமாள் கிழக்கு நோக்கி நின்றபடி திருப்பதி ஏழுமலையான் போல காட்சியளிக்கிறார். உற்ஸவர் திருநாமம் ஸ்ரீனிவாசர்.  அஷ்டலட்சுமி மண்டபத்தில் சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர் உள்ளனர். பத்மாவதி தாயாரும், ஆண்டாளும் தனி சன்னதிகளில் உள்ளனர். பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, குருவாயூரப்பன், விஷ்ணு துர்க்கை, பிரம்மா, அனுமன் உள்ளனர்.  கருடாழ்வார், வடபழநி முருகன், ராஜகோபாலர், வள்ளி தெய்வானையுடன் திருத்தணி முருகன், வாரியார் சுவாமிகள் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.
பெருமாளுக்கு வெள்ளிக்கிழமையிலும்,  உற்ஸவருக்கு புதன்கிழமையிலும் திருமஞ்சனம் நடக்கிறது. அப்போது தரிசித்தால் தடை நீங்கி திருமணம் இனிதே நடக்கும். வியாழக்கிழமையன்று ஏகாந்த சேவையைத் தரிசித்தால் கிரக தோஷம் மறையும்.  நாக கன்னியம்மன் சன்னதியில் வாதமுடக்கி மரம் உள்ளது. அதனடியில் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் பெற விளக்கேற்றுகின்றனர்.
ஆதிநாராயணர் பெருமாள் சன்னதியைச் சுற்றி பெரிய பலவேசம், சின்ன பலவேசம், பூக்கண் பலவேசம், சப்பாணி முத்து, லாடகுரு சன்னியாசி,  இருளப்பர், நட்டாணி பலவேசம், சுடலை, முண்டன் ஆகிய கிராமத்து தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன.
எப்படி செல்வது:  திருநெல்வேலி –  திருச்செந்துார் வழியில் 45 கி.மீ., துாரத்தில் குரும்பூர் (45 கி.மீ).  
அங்கிருந்து நாசரேத் செல்லும் வழியில் 5 கி.மீ.,

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar