Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news நாளை மகாளய அமாவாசை: குடும்பம் ... நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்! நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்!
முதல் பக்கம் » துளிகள்
மகாளய அமாவாசையில் செய்ய வேண்டிய தானங்கள்!
எழுத்தின் அளவு:
மகாளய அமாவாசையில் செய்ய வேண்டிய தானங்கள்!

பதிவு செய்த நாள்

05 அக்
2021
07:10

தானம் என்பது தனக்கே இல்லாத நிலை வரும் வரை தருவதாகும். அதுவும் மகாளய அமாவாசை நாளில் செய்யும் சிறு தானமும் நமது முன்னோர்களின் பசியை தீர்த்து அவர்களின் ஆசியை வழங்கக்கூடியது. பித்ரு தர்ப்பணம் செய்தால் நமது முன்னோர்கள் சிறுவயதில் இறந்தவர்கள், பிறந்த உடன் இறந்த குழந்தைகள், துர்மரணம் ஆனவர்களுக்கு நல்ல கதி கிடைக்கும். இத்தகைய சிறப்புமிக்க அமாவாசை திருநாளில் தானங்கள் செய்தால் நல்ல பலன்களை அடையலாம்.

கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் வாசம் செய்கின்றனர். அனைத்து தெய்வங்களுக்கும் மற்றும் தேவதைகளுக்கும் ஒரே நேரத்தில் தானம் செய்ய முடியும். பசுவுக்கு உணவளித்தால் அனைத்து தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் உணவளித்ததற்கு சமம். எனவே இத்தகைய சிறப்புடைய பசுவிற்கு தங்களால் இயன்ற அளவு உணவை அளிக்கவும்.

பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தானத்துக்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும். கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது. பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம். ஒரு கட்டு அகத்திக்கீரையை உணவாக அளிக்கலாம். பழங்களில் வாழைப்பழமே மிகச் சிறந்தது. ஆறு மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம். அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம்.

அனைவரும் ஒரேநாளில் அகத்திக்கீரை தருவதால் பசுவிற்கு சலிப்பு ஏற்பட்டு அகத்திக்கீரையை உண்ண மறுக்கிறது. எனவே, அகத்திக்கீரைக்கு பதிலாக கோதுமை தவிடு, அரிசி தவிடு, புண்ணாக்கு போன்றவையும் அமாவாசை அன்று தானம் செய்யலாம்.

தானம் செய்ய ஏற்ற எளிதாக சமைக்கும் வகையில் கத்தரி, அவரை, பீன்ஸ், வெண்டை, உருளை, கேரட், பீட்ரூட், முருங்கை, கோஸ், வாழைக்காய், முழுபூசணி போன்றவற்றை தானம் தருதல் நன்று. எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்த மரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும். அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தால் நமது கர்ம வினைகளை போக்கிக் கொள்ள முடியும்.

எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் :

அன்னம் - வறுமையும், கடன் தொல்லைகளும் நீங்கும்

தேன் - புத்திர பாக்கியம் உண்டாகும்

தீபம் - கண்பார்வை தெளிவடையும்

அரிசி - நாம் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்களை போக்கும்

நெய் - நாட்பட்ட தீராத நோய்களை போக்கும்

பால் - துக்கம் நீங்கும்

பழங்கள் - புத்தியும், சித்தியும் உண்டாகும்

தேங்காய் - நினைத்த காரியம் வெற்றியாகும்

நெல்லிக்கனி - ஞானம் உண்டாகும்

பூமி தானம் - அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தல் என்பது நம் பிதுர்களை மகிழ்விக்கும். நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைந்து அவர்களின் ஆசிகளும் கிடைக்கும். நமது குலம் தழைக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar