தன்னைச் சரணடைந்தவரை காக்க இன்றே இப்பொழுதே ஓடி வருபவர் நரசிம்மர். தாயின் கர்ப்பத்தில் பிறந்து, வளர்ந்து ஆளாகி இரண்யாசுரனைக் கொல்ல தாமதமாகும் என்பதால் துாணில் இருந்து வெளிப்பட்டார் நரசிம்மர். ‘‘எங்கேயடா உன் ஹரி?’’ என்று இரண்யாசுரன் கேட்ட போது பிரகலாதன், ‘எங்கும் நிறைந்த விஷ்ணு துாணிலும் இருக்கிறான்; துரும்பிலும் இருக்கிறான்’ என துாணைக் காட்டினான். அதைப் பிளக்க முயன்றான் இரண்யன். சிங்க முகமும், மனித உடம்பும் கொண்டவராக கர்ஜித்தபடி, துாணைப் பிளந்தபடி வெளிப்பட்டார் நரசிம்மர். கூரிய நகங்களால் அசுரனின் வயிற்றைக் கிழித்து, குடலை மாலையாக்கி கொண்டு ஆவேசித்தார். மகாலட்சுமி ஓடி வந்து நரசிம்மரை அமைதிப்படுத்தினாள். அவளைத் தன் மடியில் தாங்கியபடி லட்சுமிநரசிம்மராக காட்சியளித்தார். நரசிம்மருக்குரிய சுவாதி நட்சத்திரத்தன்று மாலை 4:30 – 6:00 மணிக்குள் பானகம், தயிர்சாதம் படைத்து வழிபட்டால் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும். இதை ‘நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை’ என்பார்கள்.