திருமணத்தை காலாகாலத்தில் நடத்த பெற்றவர்கள் துடிக்கின்றனர். ‘பருவத்தே பயிர்செய்’ என்பது ஆடிப்பட்டம் விதைப்பதற்கு மட்டுமல்ல. மணவாழ்விற்கும் பொருந்தும். இதனை வடமொழியில் ‘சுபஸ்ய சீக்கிரம்’ என குறிப்பிடுவர். இதற்காக பெற்றோர் குழந்தைகளின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோசியரிடம் ஓடுவர். ‘என் பிள்ளைக்கு குருபார்வை வந்தாச்சா? வியாழ நோக்கம் எப்போ வரும்?’ என்றெல்லாம் கேட்பர். ஒருவரின் ராசிக்கு, 5,7,9 இடங்களில் குரு சஞ்சரிக்கும்போது அவரின் சுபபார்வை உண்டாகும். அப்போது முயற்சித்தால் திருமண யோகம் அமையும். குருபார்வையின் போது குழந்தைப்பேறு, புதுமனை குடிபுகுதல் போன்ற சுபநிகழ்ச்சிகளும் நடந்தேறும்.