நால்வழிச்சாலையில் குறித்த இடத்திற்கு விரைவாகவும், பாதுகாப்பாகவும் செல்வது போல, பிறவிப்பயணத்தை இனிதாக அமைய சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் வழிகாட்டியுள்ளனர். தேவாரம், திருவாசகப் பாடல்கள் பாடுவோருக்கு பிறவித் துன்பத்தை விரைவில் நீங்கும். அத்துடன் ‘நமசிவாய’ ‘சிவாயநம’ என்னும் ஐந்தெழுத்து மந்திரங்களை தினமும் ஜபிக்க வேண்டும். அவ்வையார் நீதிநுாலான நல்வழியில், ‘சிவாயநம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.