ஞானப்பழம் கிடைக்காததால் முருகன் கோபித்து வந்து நின்ற தலம் பழநி. இங்கு மலை அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி கோயிலே மூன்றாம் படை வீடாகும். இங்கு முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். குழந்தை வடிவமாக முருகன் இருப்பதால் வள்ளி, தெய்வானைக்கு சன்னதி இல்லை. சிவனின் அம்சமாக முருகன் இங்கு இருப்பதால் கருவறை சுற்றுச்சுவரில் தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர் உள்ளனர். பழநிக்கு வருபவர்கள் முதலில் பழநி பெரியநாயகி கோயிலையையும், மலையடிவாரத்தில் இருக்கும் திருவாவினன்குடி குழந்தை வேலாயுதரையும் தரிசிக்க வேண்டும். பின்னரே மலைக்கோயிலில் தண்டாயுதபாணியை வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.