ரோஜா செடியில் முள்தான் அதிகம். பூக்களோ குறைவு. அதுபோல்தான் தற்போது பலரது வாழ்க்கையில் முட்களாக பல பிரச்னைகள் முளைக்கின்றன. முட்களை ஈஸியாக எடுத்துவிடலாம். பிரச்னைகளை தீர்க்க முடியுமா... முடியும் என்கிறார் பகவதி அம்மன். பகவதி அம்மன் என்றவுடன் கேரளா வரை செல்ல வேண்டுமே என நினைக்க வேண்டாம். சென்னை செனாய் நகரில் உங்களுக்காக காத்திருக்கிறாள். வாருங்கள். யாகங்களில் உயர்ந்தது அஸ்வமேதம். பெண்களில் உயர்ந்தவர் சீதை. அதுபோல யந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீசக்ரம். அதற்கு வடிவம் கொடுத்தால் மஹாமேரு. அப்படிப்பட்ட இடத்தில் அருள்பாலிக்கிறாள் பகவதி. கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் அம்மனின் தரிசனம் நமக்கு கிடைத்துவிடும். அனைத்து தெய்வங்களும் தனது வலக்கையை மேல் நோக்கி இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் இங்கு பகவதி தனது வலக்கையை கீழ்நோக்கி காட்டி அருள்கொடுக்கிறாள். பேரழகியாக காட்சி தரும் பகவதி, உள்ளங்கை அளவு விளக்குகளின் வெளிச்சத்தில் ஜொலிக்கிறாள். அம்மனின் சிரிப்பை பார்த்தாலே பிரச்னைகள் எல்லாம் கரைந்துவிடும். அம்மனை பார்த்தபின் வலது புறத்தில் குபேர சஹஸ்ரலிங்கேஸ்வரரை பார்க்க முடியும். குபேரனின் அம்சமான இவரை வழிபட்டால் பணப்பிரச்னையே வராது. இப்படி கோயிலின் அமைப்பு ஒருபுறம் இருக்க.. பிரச்னைகளை தீர்க்கும் பரிகாரத்தை பார்த்துவிடலாம் வாருங்கள். பரிகாரம் என்னவோ சிறியதுதான். ஆனால் அதற்கு கிடைக்கும் பலனோ பெரியது. ஒன்றும் இல்லை. ஒரு தட்டில் 9 எலுமிச்சை விளக்கை ஏற்றுங்கள். அம்மனை ஒன்பதுமுறை சுற்றிவாருங்கள். இப்படி தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமையில் செய்யுங்கள். பிரச்னை எப்படி துண்ட காணோம் துணிய காணோம் என்று ஓடுகிறது என்பதை பிறகு பாருங்கள். இப்படி செய்து பலன் அடைந்தவர்கள் தங்களால் இயன்ற அளவில் அன்னதானம் செய்கிறார்கள். ஆங்கில மாத முதல் வெள்ளியன்று திருமணமாகாத பெண்கள் இங்கு திருவிளக்கு பூஜையும், கூட்டுப்பிராரத்தனையும் செய்கிறார்கள். இப்படி தொடர்ந்து ஒருவர் 9 வாரம் செய்தால் திருமணத்தடை நீங்கும். இங்கு நவகிரகங்கள் தங்களின் மனைவிகளோடு காட்சி தருகின்றனர்.
எப்படி செல்வது: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ.,