பதிவு செய்த நாள்
06
ஜூன்
2022
04:06
இளையான்குடி மாறர், முனையாடுவார், சிறப்புலியார், இடங்கழியார், மூர்க்கர், அப்பூதி அடிகள் - சிவனடியார்களுக்கு உணவளித்தவர்கள்.
நமிநந்தியடிகள், கணம்புல்லர், கலியர் - கோயில்களில் விளக்கேற்றி தொண்டு செய்தவர்கள்.
கணநாதர், நேசர், பெருமிழலை குறும்பர்- சிவத் தொண்டர்களுக்கு உதவி செய்தவர்கள்
திருநாளைப்போவார், தண்டியடிகள்- குளம் வெட்டியவர்கள்
சோமாசி மாறர்- தினமும் யாகம் செய்தவர்
ஐயடிகள் காடவர் கோன்- சிவத்தலத்துக்கு ஒரு பாடல் பாடியவர்
திருமூலர்- திருமந்திரம் ஆசிரியர்
காரி - கோயிலைப் புதுப்பித்தவர்
வாயிலார் -மனதால் சிவனை பூஜித்தவர்
பூசலார் - உள்ளத்தில் சிவனுக்கு கோயில் கட்டியவர்
நீலகண்ட யாழ்ப்பாணர்- யாழிசைத்து சிவனை வணங்கியவர்
அமர்நீதி- அடியார்களுக்கு ஆடை வழங்கியவர்
மெய்ப்பொருளார், ஏனாதிநாதர்- தன்னை வெட்டிய எதிரியையும் திருநீறு பூசியதால் மன்னித்தவர்கள்.
திருக்குறிப்பு தொண்டர்- அடியார்களின் ஆடைகளை சலவை செய்தவர்
குங்கிலியக்கலயர்- கோயில்களுக்கு சாம்பிராணி துாபமிட்டவர்
முருகர்- பூஜைக்குரிய மலர்கள் பறித்தவர்
உருத்திர பசுபதியார்- ருத்ர மந்திரம் ஜபித்தவர்
ஆனாயர்- புல்லாங்குழல் இசைத்து பசுக்களை பராமரித்தவர்
கண்ணப்பர்- சிவனுக்கு கண்தானம் செய்தவர்
திருநீலகண்டர்- மனைவியின் கண்டிப்பால் பெண்ணாசை துறந்தவர்
சுந்தரர்- நண்பராக வாழ்ந்து சிவனை பூஜித்தவர்
இயற்பகையார்- மனைவியை தானமாக கொடுத்தவர்
கலிக்காமர், விறல்மிண்டர்- சிவனை துாது விட்டும், அடியார்களை வணங்காமலும் சென்ற சுந்தரரைக் கண்டித்தவர்கள்.
எறிபத்தர்- சிவனுக்குரிய மலர்க்கூடையைப் பறித்த யானை, பாகனை கொன்றவர்
மானக்கஞ்சாறர்- மணமாக இருந்த மகளின் கூந்தலை சிவனுக்கு வழங்கியவர்
அரிவாட்டாயர்- நைவேத்யம் தவறுதலாக சிந்தியதால் கழுத்தை அறுத்தவர்
மூர்த்தி- சந்தனக்கட்டை இல்லாததால், கையை தேய்த்து சிவனுக்கு தொண்டு செய்தவர்
சண்டேசர்- சிவனின் நைவேத்யம், மாலையை பிரசாதமாக பெற்றவர்
திருநாவுக்கரசர்- பாம்பு தீண்டி இறந்த அடியவரின் மகனை பிழைக்கச் செய்தவர்
நின்றசீர் நெடுமாறர்- மதுரை மன்னர், மடப்பள்ளி சாம்பல் பூசி வயிற்றுவலி தீரப் பெற்றவர்
குலச்சிறையார்- சம்பந்தர் மூலம் சைவ சமயத்தைக் காத்தவர்.
சடையனார்- சுந்தரரின் தந்தையார்
திருநீலநக்கர்- சிவலிங்கத்தில் வலை பின்னிய சிலந்தியை வாயால் ஊதிய மனைவியைப் பிரிந்தவர்
திருஞான சம்பந்தர்- பார்வதியிடம் ஞானப்பால் அருந்தியவர்
மூர்க்கர்- சூதாட்டத்தின் மூலம் சிவத்தொண்டு செய்தவர்
சாக்கியர்- கல்லை மலராகக் கருதி சிவன் மீது எறிந்து வழிபட்டவர்
கழறிற்றறிவார்- சிவனருளால் மிருகம், பறவைகளின் பேச்சையும் அறியும் திறன் பெற்றவர்
கணநாதர்-தொண்டு செய்ய விரும்பிய சிவனடியார்களுக்கு பயிற்சி அளித்தவர்
கூற்றுவர்- சிவனின் திருவடியை தலையில் தாங்கும் பேறு பெற்றவர்.
புகழ்ச்சோழர்- போரில் தன்னால் கொல்லப்பட்டவர்களைக் கண்டு வருந்தி தீக்குளித்தவர்
நரசிங்க முனையரையர்- திருவாதிரையன்று பொன்னும், உணவும் தானம் செய்தவர்
அதிபத்தர்- தனக்கு கிடைத்த பொன்மீனை சிவனுக்கு அர்ப்பணித்தவர்
கலிக்கம்பர்- அடியாரின் திருவடியைக் கழுவ தண்ணீர் ஊற்றாத மனைவியின் கையை வெட்டியவர்.
சத்தி-சிவனடியார்களை இகழ்ந்தவர்களின் நாக்கை அறுத்தவர்
வாயிலார்-மவுனவிரதம் இருந்து சிவனைப் பூஜித்தவர்
செருத்துணையார்- சிவனுக்குரிய பூவை முகர்ந்த மனைவியின் மூக்கை வெட்டியவர்
புகழ்த்துணையார்- அபிஷேக குடம் சிவலிங்கம் மீது தவறி விழுந்ததால் வருந்தியவர்
கோட்புலியார்- சிவனுக்குரிய நெல்லை எடுத்து சாப்பிட்ட உறவினர்களை கொன்றவர்
கோச்செங்கட்சோழர்- மாடக்கோயில்கள் கட்டியவர், சிலந்தியாக இருந்து சிவனருளால் மன்னராக பிறந்தவர்