Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பூக்கள் இல்லாத பட்சத்தில் இலைகளால் ... முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே!
முதல் பக்கம் » துளிகள்
கந்தன் இருக்கும் வரை கவலையில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2022
04:06


ஓம் முத்தமிழ் வடிவே முதல்வா போற்றி
ஓம் அகத்தியருக்கு அருளிய ஆண்டவா போற்றி
ஓம் அமரரைக் காத்த அன்பா போற்றி
ஓம் அருணகிரி பாடிய அமலா போற்றி
ஓம் அழகர் மலையில் அருள்வாய் போற்றி
ஓம் ஆறுமுகம் கொண்ட ஆதவா போற்றி
ஓம் ஆண்டிக் கோலமே கொண்டாய் போற்றி
ஓம் ஆறுபடை வீடுடைய அரசே போற்றி
ஓம் ஆறெழுத்து மந்திரம் உகந்தாய் போற்றி
ஓம் இடும்பன் காவடி ஏற்றாய் போற்றி

ஓம் இளங்குமர ஏந்தலே எந்தாய் போற்றி
ஓம் உலகை வலம் வந்த உன்னதமே போற்றி
ஓம் உருகும் அடியார் உளம் வாழ்வாய் போற்றி
ஓம் எட்டுக்குடி அழகா எம்பிரான் போற்றி
ஓம் எண் கண் இறைவா ஏகா போற்றி
ஓம் எங்கும் இருப்பாய் துணையாய் போற்றி
ஓம் ஏரகத்து அரசே எம்மான் போற்றி
ஓம் ஐங்கரன் தம்பியே அறுமுகா போற்றி
ஓம் ஓங்காரப் பொருளே உத்தமா போற்றி
ஓம் ஔவைக்கு அருளிய பாலகா போற்றி

ஓம் கதிர்காம அருவக் கந்தா போற்றி
ஓம் கந்த கோட்டத்துறை கடவுளே போற்றி
ஓம் கந்தகிரிக் கடம்ப மார்பா போற்றி
ஓம் கந்தா குமரா கனலா போற்றி
ஓம் களிற்றுார்திப் பெருமானே கடம்பா போற்றி
ஓம் கழுகுமலை வாழ் கந்தா போற்றி
ஓம் கனலில் உதித்த கருணையே போற்றி
ஓம் கார்த்திகைப் பெண்கள் பாலனே போற்றி
ஓம் காவடி பிரியனே கதிர்வேலா போற்றி
ஓம் கிரவுஞ்சம் தகர்த்த கீர்த்தியே போற்றி

ஓம் குடந்தைக் குமரா குருபரா போற்றி
ஓம் குமர கூர்வடி வேலா போற்றி
ஓம் குறிஞ்சித் தலைவா குகனே போற்றி
ஓம் குழந்தை வேல குமரா போற்றி
ஓம் குன்றக் குடிவாழ் குணாளா போற்றி
ஓம் குன்று தோறாடும் குழந்தாய் போற்றி
ஓம் கூடற் குமரா கோமான் போற்றி
ஓம் கொடியிற் சேவல் கொண்டாய் போற்றி
ஓம் கொல்லாதருளும் கோவே போற்றி
ஓம் கொல்லிமலை வேடர் தெய்வம் போற்றி

ஓம் கோதில்லா குணத்துக் குன்றே போற்றி
ஓம் கௌமாரத் தலைவா கௌரி மைந்தா போற்றி
ஓம் ஞானத்தின் வடிவே நாயகா போற்றி
ஓம் ஞான தண்டாயுதபாணி போற்றி
ஓம் சக்திவேல் பெற்ற சண்முகா போற்றி
ஓம் சங்கத் தலைவா சதுரா போற்றி
ஓம் சடாட்சர மந்திரமே சரவணா போற்றி
ஓம் சரவணபவ சக்கரம் உறைவாய் போற்றி
ஓம் சங்கரன் பாலா சற்குணா போற்றி
ஓம் சரவணத் துதித்த சிவமைந்தா போற்றி

ஓம் சஷ்டி நோன்பேற்கும் சதுரா போற்றி
ஓம் சிங்கமுகனை வென்ற சீலா போற்றி
ஓம் சிந்தை நிறையும் சிங்கார வேலனே போற்றி
ஓம் சிகி வாகனா உன் சீர்த்தாள் போற்றி
ஓம் சிவகிரிச் செல்வ சிவகுமாரா போற்றி
ஓம் சுப்பிரமணியாய் ஒப்பிலாய் போற்றி
ஓம் சூரனை வென்ற சுப்ரமண்யா போற்றி
ஓம் சென்னிமலைச் செல்வா சிவன்சேயே போற்றி
ஓம் சேவற் கொடியோய் செவ்வேள் போற்றி
ஓம் சேனாதிபதியே செழுஞ்சுடரே போற்றி

ஓம் சைவக் கொழுந்தே சடாட்சரா போற்றி
ஓம் தார காந்தகா தயாபரா போற்றி
ஓம் திருச்செந்துார் வாழ் தேவா போற்றி
ஓம் திருப்பரங்குன்றம் உறைவாய் போற்றி
ஓம் திருப்புகழ் பெற்ற தெய்வமே போற்றி
ஓம் திருப்போரூர் அருள் தேவா போற்றி
ஓம் திருமாலின் மருகா திருமுருகா போற்றி
ஓம் திருத்தணிகை வாழ் தெய்வமே போற்றி
ஓம் திருவருள் தருவாய் தேவ சேனாபதி போற்றி
ஓம் திருவிடைக்கழி அருள் தலைவா போற்றி

ஓம் திருவினும் திருவே திருவேலா போற்றி
ஓம் தித்திக்கும் வாழ்வருள் திவ்யா போற்றி
ஓம் திவ்ய சொரூப தேவனே போற்றி
ஓம் தேன் தினைமா ஏற்கும் திருவே போற்றி
ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி
ஓம் தேவயானை நாயகா போற்றி
ஓம் தேவாதி தேவனே தண்டபாணி போற்றி
ஓம் நக்கீரனைக் காத்த நல்லருள் போற்றி
ஓம் நந்தா விளக்கே நன்மையே போற்றி
ஓம் நவவீரர் நாயகா நல்லோய் போற்றி

ஓம் பராசக்தி பாலகா அறுமுகா போற்றி
ஓம் பழநிமலை பாலா வேலா போற்றி
ஓம் பழமுதிர்ச்சோலை பரனே போற்றி
ஓம் பன்னிரு கரமுடை பாலகா போற்றி
ஓம் பாலசுப்பிரமண்ய பழமே போற்றி
ஓம் பிரணவம் உறைத்த பெரியோய் போற்றி
ஓம் பிரம்மன் வணங்கும் பாலனே போற்றி
ஓம் பொன்னாய் ஒளிரும் உன் திருவடி போற்றி
ஓம் மயிலேறி வரும் மாணிக்கமே போற்றி
ஓம் மயிலம் மலையிலருள் மரகதமே போற்றி

ஓம் மயூகிரி அமர்ந்த கோவே போற்றி
ஓம் மலைதோறும் அருளும் வள்ளலே போற்றி
ஓம் மலையைப் பிளந்த மால்மருகா போற்றி
ஓம் மனதைக் கவர்ந்தோய் போற்றி
ஓம் முருகெனும் அழகே முதல்வனே போற்றி
ஓம் மூவினை களைந்திடும் முருகனே போற்றி
ஓம் வடிவேலைப் பெற்ற வடிவழகா போற்றி
ஓம் வள்ளி மணாளா வடிவேலா போற்றி
ஓம் வல்லமை மிக்க வள்ளலே போற்றி
ஓம் வயலுார் வாழும் வடிவேலா போற்றி

ஓம் விசாகத் துதித்த வேலனே போற்றி
ஓம் விருத்தனாய் வள்ளி முன் நின்றாய் போற்றி
ஓம் வீரபாகு சோதரா வெற்றி வேலா போற்றி
ஓம் வேடனாய் வந்த வேலவா போற்றி
ஓம் அல்லல் போக்கி அருளும் ஆண்டவா போற்றி
ஓம் ஆனந்த வாழ்வு தரும் ஆறுமுகா போற்றி
ஓம் பற்றினேன் உந்தன் திருவடி போற்றி!
ஓம் பதம் தந்து காத்திடுவாய் பன்னிரு கையனே போற்றி போற்றி!

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar