சூரபத்மனைக் கொல்ல விரும்பாமல் மயில், சேவலாக மாற்றி தன்னோடு சேர்த்துக் கொண்டவர் முருகன். இதனால் ‘சூரனுக்கு பெருவாழ்வு அளித்தவர்’ என அவரை போற்றுவர். எதிரி மீது இரக்கப்படும் முருகனை ‘ பக்தர்கள் கேட்ட வரம் எல்லாம் கொடுக்கும் தெய்வம்’ எனப் போற்றுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார். ஒருவரிடம் ஒருமுறை உதவி கேட்கலாம்... இருமுறை கேட்கலாம்... கோடி முறை கேட்க முடியுமா என்றால் அப்போதும் முருகன் அருள்புரிவார். கோடி முறை வேண்டுதல் வைத்தாலும் முருகன், தன் பக்தர்களிடம் கோபம் கொள்வதில்லை. திருப்புகழில் ‘அடியார் கோடி குறை கருதினாலும் வேறு முனியறியாத தேவர் பெருமாளே’ என்கிறார் அருணகிரிநாதர்.