ஸ்ரீரங்கம் கோயிலில் வெவ்வெறு காலக்கட்டங்களில் பல்வேறு மன்னர்கள் திருப்பணிகள் செய்துள்ளனர். இதில் ரங்கவிலாச மண்டபத்தின் மேற்குப்புறம் அமைந்துள்ள வேணுகோபாலன் சன்னதி ஹொய்சால மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதற்கான குறிப்புகள் கிடைக்கின்றன. கட்டட அமைப்பும் அதை உறுதி செய்வதாக உள்ளது. இச்சன்னதி பிரகாரத்தில் கண்ணாடியில் முகம் பார்க்கும் பெண், அபிநயத்தோடு நடனமாடும் பெண் ஆகியோரடங்கிய சிற்பங்கள் மிகுந்த கலை நயத்தோடு வடிவமைக்கப்பட்டிருப்பது சுற்றுலாப்பயணிகளை வெகுவாகக் கவர்கிறது.