Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

அறிந்த விநாயகர்... அறியாத விஷயங்கள்! களிமண் விநாயகர் தத்துவம்
முதல் பக்கம் » துளிகள்
நல்வாழ்வு தரும் நாயகர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஆக
2022
03:08


எளிய தெய்வம், இனிய தெய்வம் விநாயகர். தெருவோரம் எங்கும் இருப்பதால் எளிமையானவர். குழந்தை முதல் பெரியவர் வரை விரும்புவதால் இனிமையானவர். ‘வி’ என்றால் விசேஷமான, ‘நாயகர்’ என்றால் தலைவர். விஷேசமான தலைவர்.  கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி. சிறுபிள்ளையாக இருந்தாலும் ‘ஆர்’ என்ற மதிக்கும்படியாக ‘பிள்ளையார்’ என போற்றப்பட்டார்.  இவரை வழிபட்டால் தடைகள் அகலும்.  
ஒரு கொம்பு, இரண்டு செவி, மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் இவருக்கு உண்டு. பூதம், தேவர், விலங்கு, ஆண், பெண், உயர்திணை, அஃறிணை என அனைத்துமாக இருக்கிறார். பாசம், அங்குசம், தந்தம், மோதகம், கலசத்தை ஏந்திய இவர் படைத்தல் முதலான ஐந்து தொழில்கள் செய்கிறார்.   
 அடக்க உதவும் அங்குசம் இவரது கையில் இருப்பதால், யானையான தன்னை அடக்கும் சக்தி தனக்கே உண்டு என காட்டுகிறார். நம்மை அடக்கும் சக்தி மற்றவரிடமோ அல்லது நமக்கு வெளியிலோ இருப்பதாக நினைக்க கூடாது. அடக்கும் சக்தி நம்மிடமே உள்ளது என்கிறார்.
பசுஞ்சாணம், களிமண், மஞ்சள் என எதைப் பிடித்தாலும் விநாயகர்தான். ‘பிடிச்சு வச்சா பிள்ளையார்’ என்றே சொல்வர். மஞ்சள், சந்தனம், சாணம், களிமண், எருக்கு வேர் என அனைத்திலும் அருள்புரிபவர் இவரே. அருகம்புல், எருக்கம்பூ என எளிய பூக்களை விரும்பி ஏற்பார். ஆனால் பக்தர்களுக்கு அருள்வதில் இவருக்கு நிகர் இவரே. அருகம்புல் அர்ச்சனை செய்தால் விரும்பும் பதவிகள், மேலுலக வாழ்வு விநாயகர் அருளால் கிடைக்கும் என்கிறார் வள்ளலார்.
நல்வாழ்வு தரும் நாயகரான விநாயகர் விரும்பும் நைவேத்யம் பற்றி அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.   
பக்கரை விசித்ரமணி பொற்கலணை யிட்டநடை
     பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்
பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
     பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
     சிற்றடியு முற்றிய பன்னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ் விருப்பமொடு
     செப்பென எனக்கருள்கை ...... மறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடனெய்
     எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்
டெச்சில் பயறப்பவகை பச்சரிசி பிட்டுவெள
     ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
     விக்கிந சமர்த்தனெனும் ...... அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
     வித்தக மருப்புடைய ...... பெருமாளே
கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்ப வகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், மாவு வகைகள், கிழங்குகள், கடலை ஆகியவற்றை விநாயகருக்கு படைக்க வேண்டும். இப்பாடலை படித்தாலும் பலன் கிடைக்கும்.
 மண்ணில் விநாயகர் சிலை செய்து வழிபட்டு தண்ணீரில் கரைப்பது தத்துவ வழிபாடு. உயிர்கள் மண்ணில் தோன்றுகின்றன. முடிவில் சாம்பலானதும் நீரில் கரைகின்றன. இதை உணர்த்தவே மண் விநாயகரை மூன்று நாள் வழிபட்டு பின்னர் நீர்நிலையில் கரைக்கிறோம்.  
இவரை வழிபடும் போது ‘ஓம் காம் கணேஸாய நமஹ’ என்னும் மந்திரத்தை 108 முறை ஜபிக்கலாம். அவ்வையார் பாடிய விநாயகர் அகவலை படித்து பலன் பெறலாம். 

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar