தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை அடைய ஐப்பசி அமாவாசையன்று பெண்கள் இருப்பது கேதாரகவுரி விரதம் (அக்.25.) இந்நாளில் நிறை கும்பத்தில் தேங்காய், மாவிலை, பூக்களால் அலங்கரித்து, அதில் சாம்பமூர்த்தியான சிவபெருமானை எழுந்தருளச் செய்து வழிபடுவர். வலது கையில் 21 முடிச்சிட்ட மஞ்சள் கயிறை நோன்புக்காக கட்டுவர். பழவகைகள், பலகாரங்கள் ஆகியவற்றையும் 21 என்ற எண்ணிக்கையில் தான் படைப்பர். பார்வதி மேற்கொண்ட விரதம் என்பதால் கேதாரகவுரி என பெயர் வந்தது. இதன் பயனாக சிவனின் உடம்பில் இடப்பாகத்தை பார்வதி பெற்றாள். சுமங்கலி பாக்கியம், நிலையான செல்வத்தை அடைய இதை மேற்கொள்வர்.