சூரபத்மனின் கொடுமையில் இருந்து தேவர்களை விடுவிக்க முருகப்பெருமான் படையுடன் புறப்பட்டார். சூரபத்மனின் இருப்பிடமான வீரமகேந்திரபுரத்தை நோக்கி செல்லும் வழியில், விந்தியமலைக்கு அருகே சூரபத்மனின் தம்பியான தாரகாசுரன் படைவீரர்களைத் தடுத்தான். அவனைக் கொல்ல மனம் வராததால் அசுரனை யானையாக மாற்றி தன் தம்பியான தர்மசாஸ்தாவுக்கு பரிசாக கொடுத்தார். இதன்பின்னர் யானையே சாஸ்தாவின் வாகனமாகி விட்டது.