Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ரிஷபம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023 கடகம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023 கடகம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023
முதல் பக்கம் » சனிப்பெயர்ச்சி பலன்! (17.1.2023 முதல் 29.3.2025 வரை)
மிதுனம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023
எழுத்தின் அளவு:
மிதுனம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023

பதிவு செய்த நாள்

17 ஜன
2023
03:01

மிருகசீரிடம் : னி பகவான் உங்களின் பத்தொன்பதாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
செவ்வாயை நட்சத்திர அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு இந்த சனிபெயர்ச்சியால் உடல்நிலை தேறும். செலவு கட்டுக்குள் இருக்கும். காரிய தடைகள் நீங்கும். தொட்டதெல்லாம் துலங்கும். தந்தையாரின்  நலனில் அக்கறை தேவை.  கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது.
கிரகங்களின் சஞ்சாரத்தால் பெற்றோர், சகோதர, சகோதரிகளுடன் இணக்கம் ஏற்படும்.  கெட்டிக்காரர் என பெயரெடுப்பீர்கள். அனுபவ அறிவால் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கூட்டாளிகள், நண்பர்களுடன் சண்டை சச்சரவு வராமல் பார்த்துக் கொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். பழைய கடன் அடைபடும். நவீன விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள். பழைய தீய பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள். முடியாது என நினைத்த காரியங்களை செய்யத் தொடங்குவீர்கள். மனித பலத்தைவிட தெய்வ பலத்தை நம்பி ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வேண்டாத, விபரீத யோசனைகளில் இருந்து மனதை திசை திருப்புவீர்கள்.
அனைத்து விஷயங்களையும் முன்கூட்டி திட்டமிட்டு முடிப்பீர்கள். நல்லவர்களின் நட்பால் முன்னேறுவீர்கள். சமூகத்தில் உங்கள் பெயரும், புகழும் உயரும். சகோதர, சகோதரிகளிடம் சகஜகமாகப் பேசி மகிழ்வீர்கள். திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்தத் திட்டமிடுவீர்கள். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.
தொழிலில் வீண் அலைச்சல் இனி இருக்காது. பழைய நஷ்டங்களை ஈடுகட்டும் வகையில் லாபம் வரத் தொடங்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு புரியாத புதிராக இருந்தவர்கள் நேர்மையுடன் பழகத் தொடங்குவர். எதிரிகளின் ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உழைப்புக்கேற்ப லாபம் பன்மடங்கு கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு நஷ்டம் குறைந்து வருமானம் வரத் தொடங்கும். புதிய வளர்ச்சியைக் காண்பீர்கள். தொடர்ந்த போட்டிகள் நீங்கும். கூட்டுத் தொழில் சிறப்பாக நடக்கும். புதிய முதலீடுகளைச் செய்யலாம். கொடுக்கல், வாங்கலில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்
பணியாளர்களுக்கு புதிய பொறுப்பு தேடி வரும். அனைவரிடமும் இன்முகத்துடன் பழகுவீர்கள். அலுவலகப் பயணங்களால் நன்மை உண்டாகும். தடைபட்ட ஊதிய உயர்வு கிடைக்கும்.
அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். தைரியமும், செயலாற்றும் திறமையும் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கட்சித் தலைமையுடன் இணக்கமாக இருப்பீர்கள். வழக்குகளில் நல்ல முடிவைக் காண்பீர்கள்.
கலைத்துறையினருக்கு தடைகளுக்குப் பின் ஒப்பந்தம் கிடைக்கும். வருமானம் நன்றாகவே இருக்கும். ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்வீர்கள். சக கலைஞர்கள் உதவுவார்கள்.
பெண்களுக்கு ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கணவருடன் ஒற்றுமையாக நடந்துகொள்வீர்கள். ஆரோக்யம் சீராக இருக்கும்.
மாணவர்கள் நன்றாகப் படித்து தேர்வுக்கு தயாராவீர்கள். பழைய தவறுகளைத் திருத்திக் கொள்வீர்கள். பெற்றோரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.

பரிகாரம்:  நந்தீஸ்வரர் வழிபாடு

+ முயற்சியில் வெற்றி  
- பணவிஷயத்தில் கவனம்

திருவாதிரை: சனி பகவான் உங்களின் பதினெட்டாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
புதன் - ராகு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த சனிபெயர்ச்சியில் நெருக்கடியான பிரச்னைகள் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் மீது இரக்கம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.
குடும்பத்தில் மேன்மை உண்டாகும். முகத்தில் வசீகரம் ஏற்படும். நல்ல பேச்சாற்றல் உண்டாகும். இனிமையாகவும், சாதுர்யமாகவும் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களால் பாராட்டப்படுவீர்கள். அரசியல் தொடர்பால் வளர்ச்சி காண்பீர்கள். சோம்பேறித்தனம் அகன்று சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள்.
குடும்பஸ்தானம் சரராசியாக அமைவதால் நவீனமான வீடுகளுக்கு மாறும் வாய்ப்பு கிடைக்கும். வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல முயல்பவர்கள் வெற்றியடைவார்கள். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்களும், ஜீரணக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்களும் குணமடைவார்கள்.
தெய்வீகக் காரியங்களில் பங்கெடுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் பேச்சை அனைவரும் கேட்பார்கள். உங்கள் பேச்சை மீறி நடந்த பிள்ளைகள் உங்கள் சொல்லுக்கு அடிபணிவர். அவர்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்ல விசா கிடைக்கும். பலருக்கும் உதவி செய்து நற்பெயர் வாங்குவீர்கள். வாழ்க்கை சலிப்பின்றி நீரோடை போல் அமைதியாகச் செல்லும். பூர்வீகச் சொத்து கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகளில் தைரியத்துடன் கால்பதிப்பீர்கள்.
செய்தொழில் சூடுபிடிக்கத் தொடங்கும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நவீன உபகரணங்கள் வாங்குவீர்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். விலகிச் சென்ற நண்பர்கள், உறவினர்கள் நெருங்கி வருவர். உடல்நலம் சீராகும். களவு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பணியாளர்களுக்கு சகஊழியர்களின் ஆதரவால் வேலைப்பளு குறையும். ஊதிய உயர்வு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். தயக்கமின்றி எண்ணங்களை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறுவீர்கள்.
வியாபாரிகளுக்கு வியாபாரம் சீராகவே நடக்கும். ஆனாலும் ஓய்வில்லாமல் உழைக்க நேரிடும். கொடுக்கல், வாங்கல் நன்றாகவே தொடரும். வீண்செலவுகளைத் தவிர்க்கவும்.  அதேநேரம் கூட்டாளிகளை நம்பி எதையும் செய்ய வேண்டாம். வாடிக்கையாளர்கள் திருப்தியடைவார்கள்.
அரசியல்வாதிகளுக்கு முயற்சிகள் அனைத்தும் நினைத்தபடி முடியும். ஆனாலும் தொண்டர்களின் அதிருப்தியை சந்திக்க நேரிடும். பொறுப்புமிக்க பதவிகள் தேடி வரும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள்.
கலைத்துறையினருக்கு விடாமுயற்சிக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மற்றபடி உங்களைக் குறை சொல்லும் சக கலைஞர்கள் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம்.
பெண்கள் கணவருடன் ஒற்றுமையாக செயல்படுவது நல்லது. உடன் பிறந்தவர்களால் பிரச்னை வரலாம். எதிலும் அவசரப்படாமல் நிதானமாகப் பேசவும். பணவரவுக்கு எந்தப் பிரச்னையும் வராது.
மாணவர்கள் அக்கறையுடன் படித்தால் அதிக மதிப்பெண்களைப் பெறலாம்.  பெற்றோர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உற்சாகத்துடன் விளையாட்டில் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: நடராஜருக்கு தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.
+ திட்டங்கள் நிறைவேறும்

- வீண்செலவு அதிகரிக்கும்.


புனர்பூசம்: சனி பகவான் உங்களின் பதினேழாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
குருவை நட்சத்திராதிபதியாகக் கொண்ட உங்களுக்கு இந்த சனிபெயர்ச்சியில் தடை நீங்கி செயல்கள் நிறைவேறும். வாக்குவன்மையால் நன்மை ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பணப்பிரச்னை தீரும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.
தொழிலில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். லாபம் இரட்டிப்பாவதோடு புதிய முயற்சிகள் கைகூடும். உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். கூட்டாளிகளால் வந்த முட்டுக்கட்டைகள் அகலும். தொழிலில் சிறப்பான இடத்தைப் பெறுவீர்கள் என்றாலும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
மற்றபடி உங்கள் பிள்ளைகளுக்குத் தகுந்த வழி காட்டுவீர்கள். அதிக ஆசைப்படாமல் கிடைத்ததை ஏற்கும் மனப்பக்குவத்தைப் பெறுவீர்கள். புதிய வீடு வாங்கும் யோசனை அவ்வப்போது தலைதுாக்கும். பொருளாதாரத்தில் திருப்திகரமான சூழ்நிலை நிலவும்.
தொழிலில் இருக்கும் நெருக்கடிகள் படிப்படியாகக் குறையும். லாபம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இனி ஏற்படாது.
உடல்நலம் சீராகத் தொடங்கும். யோகா, பிராணாயாமம் போன்றவற்றில் ஈடுபடுவீர்கள்.  குடும்பத்தில் எப்போதும் போலவே அமைதி தொடரும். உங்களின் அனைத்துத் திட்டங்களும் நிறைவேறும். சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்தான அறிகுறிகள் தெரிய வரும். உங்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் இருப்பதாக உணர்வீர்கள். பெற்றோர், சகோதர சகோதரிகளின் ஆதரவு அதிகரிக்கும். எப்போதும் பரபரப்பாகக் காணப்படுவீர்கள்.

அதேநேரம் தகுதி குறைவானவர்களின் நட்பால் மனக்குழப்பங்களும் சஞ்சலங்களும் ஏற்படலாம். யாரிடமும்  அனாவசியப் பேச்சு வேண்டாம். மேலும் உங்கள் பெயரில் எவருக்கும் பணம் வாங்கிக் கொடுக்க வேண்டாம்.
பணியாளர்களுக்கு இந்த பெயர்ச்சியால் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆனாலும் வேலைகளைக் கச்சிதமாக முடிப்பீர்கள். சக ஊழியர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உங்கள் வேலைகள் அனைத்தும் பிரச்னையின்றி நிறைவேறும். தெளிவான மனத்துடன் பணியாற்றுவீர்கள். ஆனாலும் அலுவலக ரீதியான பயணங்களை விருப்பமில்லாமல் செய்வீர்கள்.
வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் நிலவிய பிரச்னைகள் விலகும். வருமானம் உயரும். வங்கிக் கடன்கள் சரியான நேரத்தில் கிடைக்கும். புதிய யுக்திகளைப் புகுத்தி விரைவாக விற்பனை செய்வீர்கள். ஆனால் உங்கள் எண்ணங்கள், திட்டங்களை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் நெருக்கடியான சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். உங்களுக்குத் தொல்லை கொடுத்தவர்கள் நண்பர்களாகி விடுவார்கள். உங்களின் திட்டமிட்ட பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட இலக்குகளை எட்டும். உங்களின் நெடுநாளைய லட்சியம் நிறைவேறும். தொண்டர்களை அரவணைத்து நடந்துகொள்ளவும்.

கலைத்துறையினர்  ஏற்ற இறக்கங்களைக் காண்பீர்கள். சிலருக்கு வருமானத்தில்  வளர்ச்சி ஏற்பட்டாலும் ஓரளவே புகழ் கிடைக்கும். மற்றபடி வருமானத்திற்குக் குறைவு ஏற்படாது. சக கலைஞர்களின் உதவி உங்களை உற்சாகப்படுத்தும்.

பெண்கள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். கணவரை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். அதேசமயம் உங்கள் கடமையை சரிவர ஆற்றுங்கள். ஆன்மிகத்தில் மனதைச் செலுத்துங்கள்.

மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனமாக இருக்கவும். வெளி விளையாட்டுகளைத் தவிர்க்கவும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும். பெற்றோர்களின் ஆலோசனைப்படி நடக்கவும்.

பரிகாரம்: ஸ்ரீராமர் வழிபாடு
+ திறமையான நிர்வாகம்
- நண்பரால் இடையூறு

 
மேலும் சனிப்பெயர்ச்சி பலன்! (17.1.2023 முதல் 29.3.2025 வரை) »
temple news
அசுவினி: சனி பகவான் உங்களின் இருபத்தி மூன்றாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 : சனி பகவான் உங்களின் இருபத்தி ஒன்றாம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ... மேலும்
 
temple news
புனர்பூசம்: சனி பகவான் உங்களின் பதினேழாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் ... மேலும்
 
temple news
மகம்: சனி பகவான் உங்களின் பதினான்காவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் ... மேலும்
 
temple news
உத்திரம்: சனி பகவான் உங்களின் பன்னிரெண்டாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar