பதிவு செய்த நாள்
17
ஜன
2023
03:01
புனர்பூசம்: சனி பகவான் உங்களின் பதினேழாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
குருவை நட்சத்திராதிபதியாகக் கொண்ட உங்களுக்கு இந்த சனிபெயர்ச்சியில் தடை நீங்கி செயல்கள் நிறைவேறும். வாக்குவன்மையால் நன்மை ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பணப்பிரச்னை தீரும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.
தொழிலில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். லாபம் இரட்டிப்பாவதோடு புதிய முயற்சிகள் கைகூடும். உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். கூட்டாளிகளால் வந்த முட்டுக்கட்டைகள் அகலும். தொழிலில் சிறப்பான இடத்தைப் பெறுவீர்கள் என்றாலும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
மற்றபடி உங்கள் பிள்ளைகளுக்குத் தகுந்த வழி காட்டுவீர்கள். அதிக ஆசைப்படாமல் கிடைத்ததை ஏற்கும் மனப்பக்குவத்தைப் பெறுவீர்கள். புதிய வீடு வாங்கும் யோசனை அவ்வப்போது தலைதுாக்கும். பொருளாதாரத்தில் திருப்திகரமான சூழ்நிலை நிலவும்.
தொழிலில் இருக்கும் நெருக்கடிகள் படிப்படியாகக் குறையும். லாபம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இனி ஏற்படாது.
உடல்நலம் சீராகத் தொடங்கும். யோகா, பிராணாயாமம் போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் எப்போதும் போலவே அமைதி தொடரும். உங்களின் அனைத்துத் திட்டங்களும் நிறைவேறும். சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்தான அறிகுறிகள் தெரிய வரும். உங்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் இருப்பதாக உணர்வீர்கள். பெற்றோர், சகோதர சகோதரிகளின் ஆதரவு அதிகரிக்கும். எப்போதும் பரபரப்பாகக் காணப்படுவீர்கள்.
அதேநேரம் தகுதி குறைவானவர்களின் நட்பால் மனக்குழப்பங்களும் சஞ்சலங்களும் ஏற்படலாம். யாரிடமும் அனாவசியப் பேச்சு வேண்டாம். மேலும் உங்கள் பெயரில் எவருக்கும் பணம் வாங்கிக் கொடுக்க வேண்டாம்.
பணியாளர்களுக்கு இந்த பெயர்ச்சியால் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆனாலும் வேலைகளைக் கச்சிதமாக முடிப்பீர்கள். சக ஊழியர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உங்கள் வேலைகள் அனைத்தும் பிரச்னையின்றி நிறைவேறும். தெளிவான மனத்துடன் பணியாற்றுவீர்கள். ஆனாலும் அலுவலக ரீதியான பயணங்களை விருப்பமில்லாமல் செய்வீர்கள்.
வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் நிலவிய பிரச்னைகள் விலகும். வருமானம் உயரும். வங்கிக் கடன்கள் சரியான நேரத்தில் கிடைக்கும். புதிய யுக்திகளைப் புகுத்தி விரைவாக விற்பனை செய்வீர்கள். ஆனால் உங்கள் எண்ணங்கள், திட்டங்களை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் நெருக்கடியான சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். உங்களுக்குத் தொல்லை கொடுத்தவர்கள் நண்பர்களாகி விடுவார்கள். உங்களின் திட்டமிட்ட பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட இலக்குகளை எட்டும். உங்களின் நெடுநாளைய லட்சியம் நிறைவேறும். தொண்டர்களை அரவணைத்து நடந்துகொள்ளவும்.
கலைத்துறையினர் ஏற்ற இறக்கங்களைக் காண்பீர்கள். சிலருக்கு வருமானத்தில் வளர்ச்சி ஏற்பட்டாலும் ஓரளவே புகழ் கிடைக்கும். மற்றபடி வருமானத்திற்குக் குறைவு ஏற்படாது. சக கலைஞர்களின் உதவி உங்களை உற்சாகப்படுத்தும்.
பெண்கள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். கணவரை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். அதேசமயம் உங்கள் கடமையை சரிவர ஆற்றுங்கள். ஆன்மிகத்தில் மனதைச் செலுத்துங்கள்.
மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனமாக இருக்கவும். வெளி விளையாட்டுகளைத் தவிர்க்கவும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும். பெற்றோர்களின் ஆலோசனைப்படி நடக்கவும்.
பரிகாரம்: ஸ்ரீராமர் வழிபாடு
+ திறமையான நிர்வாகம்
- நண்பரால் இடையூறு
பூசம்: சனி பகவான் உங்களின் பதினாறாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
சந்திரன் - சனி அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த சனிபெயர்ச்சியில் பேச்சு திறமையால் வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மனநிறைவு கிடைகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது.
அனாவசிய சிந்தனைகளை ஒதுக்கி வைத்து விட்டு உங்கள் செயல்களைச் செய்வது நல்லது. எவருக்கும் அவசரப்பட்டு வாக்கு கொடுக்க வேண்டாம். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்படுவர். பெரிய எதிர்பார்ப்புகள் கைகூடும். அரசாங்க வழியில் சலுகை கிடைக்கும். குடும்பத்தில் குதுாகலம் நிறையும். விலகிய உறவினர்கள் மீண்டும் சேர்வர். பணவரவு நன்றாக இருக்கும். புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். னைத்து விஷயங்களும் முடியும் வரை ஒரு பயம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியளிக்கும் செய்தி வந்து சேர்ந்து திக்குமுக்காட வைக்கும். பெற்றோரால் நன்மை உண்டாகும். சமுதாயத்தில் பெரியவர்களை சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். அவர்களின் ஆலோசனைகளை செயல்படுத்துவீர்கள். பொருளாதாரத்தில் தொய்வில்லாமல் சீரான வருமானம் வந்து கொண்டிருக்கும். நண்பர்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கும் சரியான நேரத்தில் தேவையான உதவிகளைச் செய்து பெருமையழயடைவீர்கள்.
வரவுகள் சீராக இருந்தாலும் செலவுகள் சற்று கூடுதலாக இருக்கும். நண்பர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். அவர்களின் விஷயங்களில் அனாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டாம். மற்றபடி சாதுர்யமாகப் பேசுவீர்கள். வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளைத் தொடங்குவீர்கள். இல்லத்திலும் முக்கிய நிகழ்ச்சிகளை நடத்த முயல்வீர்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை காணப்படும். அதேநேரம் வழக்கு விவகாரங்கள் இந்தக் காலகட்டத்தில் முடிவுக்கு வராது. மேலும் எந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டாலும் எல்லா ஷரத்துக்களையும் நன்றாகப் படித்து புரிந்துகொண்டு கையெழுத்திடவும்.
பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாகக் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையைக் காண்பீர்கள். அதேநேரம் தான் உண்டு தன் வேலையுண்டு என்கிற ரீதியில் பணியாற்றி அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் ஒதுங்கி இருங்கள்.
வியாபாரிகளுக்கு லாபம் பெருகும். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் லாபகரமாக இருக்கும். கூட்டாளிகள் நட்புடன் பழகுவர். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். மற்றபடி போட்டிகளை சாதுர்யமாக சமாளிக்கவும்.
அரசியல்வாதிகள் மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். தொண்டர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். வழக்கு விவகாரங்களில் கவனத்துடன் இருக்கவும்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். பேச்சாற்றல் அதிகரிக்கும். துறையில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களின் தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள்.
பெண்களுக்கு தெய்வ வழிபாட்டில் சிரத்தையுடன் ஈடுபடுவீர்கள். உடல்நலம் சீராக இருக்கும். சகோதர, சகோதரிகள் தேவைக்கேற்ப உதவிகளைச் செய்வார்கள். ஆனால் வருமானம் சுமாராகவே இருக்கும்.
மாணவர்கள் படிப்பிற்காக மேற்கொள்ளும் முயற்சி அனைத்தும் வெற்றி பெறும். சிலருக்கு வெளியூர் சென்று கல்வி கற்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு அமோகமாக அமையும்.
பரிகாரம்: குபேரன் வழிபாடு
+ பேச்சால் வெற்றி
- பணியிடத்தில் கவனம்
ஆயில்யம்: சனி பகவான் உங்களின் பதினைந்தாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
சந்திரன் - புதன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த சனிபெயர்ச்சியில் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிலும் வெற்றியும் சந்தோஷத்தையும் பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
உங்களின் கடமைகளை பட்டியலிட்டு சரியான முறையில் செய்து முடிப்பீர்கள். முன் அனுபவம் இல்லாத விஷயங்களையும் தக்க முறையில் பூர்த்தி செய்யும் ஆற்றல் உண்டாகும். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். சிலர் புதிய வீடு கட்டி குடி புகுவார்கள். அரசாங்கத்தில் அதிகாரம் தரும் பதவிகள் கிடைக்கும். சமுதாயத்தில் அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். திருமணம் ஆகாதவர்களுக்கு எதிர்பார்த்த சம்பந்தம் அமைந்து திருமணம் கைகூடும்.
உங்களின் சாதுர்யமான பேச்சால் எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். நேர்மையுடன் செயலாற்றுவீர்கள். குறுக்கு வழிகளை நம்ப மாட்டீர்கள். தம்பட்டமிடும் நண்பர்களை ஒதுக்கி வைப்பீர்கள். உங்களின் கடந்த காலச் செயல்களுக்குப் புதிய அங்கீகாரம் கிடைக்கும். உற்றார். உறவினர்களுக்கிடையே இருந்த பிரிவினை, பிரச்னைகளை சுமுகமாகத் தீர்ப்பீர்கள். ஒரு பிரச்னையை பல கோணங்களில் ஆராய்வீர்கள். சிலர் வெளியூருக்குச் சென்று வாழும் வாய்ப்பு கிடைக்கும். முக்கிய தருணங்களில் நிதானித்து செயல்பட்டால் சாதனை படைக்கலாம்.
தாமதப்பட்டிருந்த திருமணம் கைகூடும். உயர்ந்த அந்தஸ்தில் சம்பந்தம் ஏற்படும். சகோதர, சகோதரிகள் தங்களின் அன்பையும், ஆதரவையும் தருவார்கள். இல்லத்தில் நிம்மதி நிலவும். குடும்பத்தினருடன் புனித யாத்திரைகள் மேற்கொள்வீர்கள். குறைகள் நிறைகளாகி பெரிய அதிர்ஷ்ட வாய்ப்பும் உண்டாகும். ஆன்மிக பலம் அதிகரிக்கும். வழக்குகள் முடிவுக்கு வரும். அதே நேரம் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்ட இடமுண்டு கவனம். யாருக்கும் முன் ஜாமின் போட வேண்டாம்.
பணியாளர்களுக்கு பிரச்னைகள் குறையும். வருமானம் சிறப்பாக இருக்கும். மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி உங்களுடன் நட்பு பாராட்டுவார்கள். உங்கள் வேலைகளைத் திட்டமிட்டதுபோல் முடிப்பீர்கள். மற்றபடி எதிலும் அவசரம் காட்டாமல் பொறுமையுடன் செயல்படவும்.
வியாபாரிகளுக்கு புதிய முயற்சிகள் வெற்றி பெறும். ஆனாலும் கொடுக்கல், வாங்கலில் சம நிலையே உண்டாகும். எனவே கடன்களை உடனடியாக வசூலிக்க முயற்சி செய்வீர்கள். உங்களின் யுக்திகளை செயல்படுத்தும்போது பொறுமை தேவை. மற்றபடி கூட்டாளிகள் உங்கள் சொல் கேட்டு நடந்துகொள்வார்கள்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்களை அரவணைத்து நடந்துகொள்ளவும். அவர்களின் தேவைகளைத் தக்கபடி பூர்த்தி செய்யவும். கட்சிக்கு நலம் சேர்க்கும் பிரச்சாரங்களில் மட்டுமே ஈடுபடவும். மற்றபடி கட்சியின் புதிய கொள்கைகளைப் பிரபலப்படுத்துவீர்கள். கட்சியில் உங்கள் புகழும், செல்வாக்கும் உயரும்.
கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். வெளியூர் சென்று கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உங்கள் தகுதிக்குக் குறைவானவர்களிடம் நட்பு வேண்டாம்.
பெண்கள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். உடல் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். உங்கள் பேச்சை உற்றார், உறவினர்கள் கேட்டு நடந்துகொள்வார்கள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
மாணவர்கள் விளையாட்டில் ஆர்வத்தைக் குறைத்துக் கொண்டு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவும். பொறுமையுடன் பதற்றப்படாமல் படிக்கவும். தற்போது மேற்கொள்ளும் பயிற்சிகள் எதிர்காலத்திற்கு சிறந்த அடித்தளமாக அமையும்.
பரிகாரம்: நாகதேவதை வழிபாடு
+ பேச்சால் பெருமை
- உணர்ச்சி வசப்படுதல்