பதிவு செய்த நாள்
13
பிப்
2023
12:02
கீழ்கண்ட விதிமுறைகளை கடைப்பிடித்தால் மகாலட்சுமியின் அருளை பெறலாம். அது என்ன என்று பார்ப்போமா...
* பணத்தினை எச்சில் தொட்டும், சில்லறைகளை ஒலி எழுப்பியவாறும் எண்ணக்கூடாது.
* பணத்தினை தலைகீழாக மாற்றி மாற்றி அடுக்கக்கூடாது.
* வீட்டில் கண்ட இடத்தில் பணத்தினை வைக்கக்கூடாது.
* சட்டையின் மேல் பையில் பணத்தை வைத்துக்கொள்வது நல்லது.
* வீட்டில் பீரோ,அலமாரி போன்றவை ஈசான திக்காகிய வடகிழக்கு மூலையை பார்த்து இருந்தால் நல்லது.
* வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக பணத்தை ஒவ்வொரு முறையும் இடம் மாற்றி வைக்கக்கூடாது.
* வியாழன், வெள்ளி நாட்களில் பரணி, பூரம், பூராடம், பூனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரம் வரும் நாட்களில் பணத்தை சேமித்து வைத்தால் பணம் பெருகும்.
* வியாழன், வெள்ளி நாட்களில் குருஓரை, சுக்கிரஓரை நேரத்தில் பணத்தை எடுத்து சேமிக்க தொடங்கினால் சேமிப்பு அதிகரிக்கும்.
* வியாழன் தோறும் காலை 6:00 – 7:00, மதியம் 1:00 – 2:00 , இரவு 8:00 – 9:00 அருகில் இருக்கும் மகான்களின் கோயிலுக்கு சென்று வரலாம்.
* திருஞானசம்பந்த நாயனார் தந்த திருவாவடுதுறை பதிகத்தை தொடர்ந்து நாற்பத்து எட்டு நாட்கள் படித்து வர பணத்தேவை பூர்த்தியாகும்.
* கோயில்களில் நடைபெற்ற யாகசாலையில் போடப்பட்டவை,சுவாமியின் காலடியில் வைத்து தரப்படும் நாணயங்களை பீரோவில் மஞ்சள் துணியில் முடிந்து வையுங்கள். நல்ல மாற்றம் உண்டாகும்.
* பச்சைக்கலர் உண்டியலில் பணத்தை சேமியுங்கள். பணவிஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும்.