திருவிளக்கில் சுடர் விடும்ஜோதி சிவன், அதில் உள்ள சூடு பராசக்தி, அதன் சிவப்பான நிறம் கணபதி, சிவன் நெற்றிக்கண்ணிலிருந்து உருவானவர் முருகன் இதை விளக்கும் பாடல் ஒன்று இதோ... சுடரோ சிவபெருமான் சூடு பராசக்தி திடமார் கணநாதன் செம்மை - படர் ஒளியோ கந்தவேள் ஆகும் கருத்தும்கால் சற்றேனும் வந்ததோ பேத வழக்கு திருவிளக்கில் சிவ குடும்பத்தை காணலாம். விளக்கு உடம்பு, எண்ணெய் ரத்தம், திரி இவை எரிவதால் வெளிப்படுவது ஒளியாகிய ஆன்மா. ஐந்து முகங்களும் வீட்டில் உள்ள பெண்களுக்கு தேவையான அன்பு, அறிவு, மனஉறுதி, பொறுமை, சாமர்த்தியத்தை குறிக்கும். இருளைப் போக்க புறவொளி தேவைப்படுகிறது அதைப்போல மன இருளை நீக்க உள்ளொளியை பிரகாசிக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவது திருவிளக்கு. ஹிந்து மதத்தில் விளக்கேற்றுவது புனிதச் செயலாகும். எல்லா செயல்களுக்கும் விளக்கு ஏற்ற வேண்டும் என்பது நியதி.