அரச மரத்தை அவரவர் தகுதிக்கு தக்கவாறு குழந்தைகள், பெண்கள் வலம் வருவர். அவர்களுக்கு கல்வியில் மேன்மையும், குழந்தை பாக்கியமும் கிட்டும். இம்மரத்தை சுற்றினால் என்ன பலன் என்பதை சாஸ்திரங்கள் கூறியுள்ளன.அதை பார்ப்போமா... * ஞாயிறு – நோய் அகலும். * திங்கள் – மன தெளிவு கிடைக்கும். * செவ்வாய் – வெற்றி உண்டாகும். * புதன் – தொழிலில் முன்னேற்றம். * வியாழன் – கல்வி, ஞானம் வளரும், * வெள்ளி – சகல சவுபாக்யங்களும் ஏற்படும். * சனி – லட்சுமிதேவியின் அருள் கிடைக்கும். * தினந்தோறும் 108 முறை அரசமரத்தை சுற்றி வலம் வருபவர்களுக்கு அசுவமேதயாகம் செய்த முழுப்பலன் கிடைக்கும். * இந்த வழிபாட்டை தமிழ்மாதப்பிறப்பு, பவுர்ணமி, ஜென்ம நட்த்திர நாட்களில் தொடங்கலாம் என்கிறது சாஸ்திரம்.