முருகனடியார்களில் ஒருவரான அருணகிரிநாதர் அருளிய பாடல் இது. உல்லாச நிராகுல யோக இதச் சல்லாப விநோதனும் நீயலையோ? எல்லாமற என்னை உணர்ந்த நலம் சொல்லாய் முருகாசுர பூபதியே. இதை படிப்பவருக்கு ஒரே சமயத்தில் ஆறுபடை முருகனின் அருளை பெறுவர். அது எப்படி.. உல்லாசம் - தெய்வானையை மணந்த திருப்பரங்குன்றம் நிராகுலம் - சூரசங்காரம் நிகழ்ந்த திருச்செந்துார். யோகம் - யோகியாக நின்ற திருவாவினன்குடி இதம் - பிரணவத்தின் பொருளை சிவபெருமானுக்கு உபதேசித்த சுவாமிமலை. சல்லாபம் - வள்ளியை மணந்து நின்ற திருத்தணிகை. வினோதம் - அவ்வையாருக்காக பழத்தை உதிர்த்து விளையாடிய பழமுதிர் சோலை என வாரியார் விளக்கியுள்ளார்.