குருவை வழிபட குறையாவும் நீங்கும்.. சுபயோகம் தேடி வரும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2023 10:05
சிவபெருமானின் வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவமும் ஒன்று. சிவபெருமானின் யோக வடிவம் தான் தட்சிணாமூர்த்தி. முயலகன் எனும் அஞ்ஞான அரக்கனைக் காலால் மிதித்து, சின்முத்திரை மூலம் ஞானத்தைப் போதித்து சாந்தி மற்றும் ஆனந்தத்தை அருள்பவர் தட்சிணாமூர்த்தி.
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ஜீவராசிகளுக்கெல்லாம் தந்தையாகவும், சிறந்த அரசனாகவும் இருப்பதால் இப்பெயர் உண்டானது. மேலும் கு என்றால் இருள் அல்லது அறியாமை என்றும், ரு என்றால் போக்குபவர் என்றும் பொருள் உண்டு. உயிர்களின் அறியாமையை போக்குபவரே குரு. சிவனும் மக்களின் உலக இன்பம் தேடும் அறியாமையைப் போக்கி, அவனை அழித்து, தன்னோடு இணைத்து நிரந்தரமான இன்பம் தருபவர். அறியாமையை அழிக்கும் இத்தகைய வாழ்க்கை கல்வியை அளித்தவர் என்பதால், இவர் குருவாக மதிக்கப்படுகிறார். தட்சிணாமூர்த்தி உபதேசம் செய்வதால் குரு அந்தஸ்து பெறுகிறார். குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. குரு யோகம் இருந்தால் தான் சுபயோகம் கைகூடிவரும். இன்று குருவை வழிபட வாழ்வில் சுபயோகம் தேடி வரும்.