செவ்வாயில் முருகனை வழிபட கடன் பிரச்னை தீரும், வீடு வாங்கலாம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2023 10:05
செவ்வாய்க்கு மங்களன் பூமிகாரகன் என்று பெயர் உண்டு. பெயரிலேயே மங்களம் இருப்பதால், அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும். செவ்வாய்கிழமையை மங்கள்வார் என்று குறிப்பிடுவர். செவ்வாயையும், முருகப்பெருமானையும் வழிபட்டு செவ்வாயில் மங்கலப்பொருள் வாங்கினால் பன்மடங்கு பெருகுவதோடு, எல்லாச் சிறப்புகளும் நம்மைத் தேடி வரும்.ஜாதகத்தில், செவ்வாயின் பலத்தை பொறுத்தே நீதிபதிகள், ராணுவ தளபதிகள், காவல்துறையினர், பொறியியல் வல்லுனர்கள், அரசியல் தலைவர்களுக்குரிய செல்வாக்கு அமையும். செவ்வாயை வழிபட்டால் ரத்தஅழுத்தம், உஷ்ணம், கோபத்தில் இருந்து விடுதலை பெறலாம். முருகப்பெருமானுக்கு சிவப்பு மலர் கொண்டு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். விரைவில் தோஷம் நீங்கி சொந்தவீடு, மணவாழ்வு கைகூடும்.