Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வைகாசி விசாகம்; விசாகத்தில் முருகனை ... அனுமனுக்கு வெண்ணெய் ஏன்? அனுமனுக்கு வெண்ணெய் ஏன்?
முதல் பக்கம் » துளிகள்
மகா விஷ்ணுவின் தசாவதாரங்கள் தவிர மற்ற அவதாரங்கள் எவை?
எழுத்தின் அளவு:
மகா விஷ்ணுவின் தசாவதாரங்கள் தவிர மற்ற அவதாரங்கள் எவை?

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2023
02:06

பகவான் மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள் பல. அதில் முக்கியமானவற்றை வியாச முனிவர் ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கிறார். மனுவாகப் போகும் சத்தியவிரதனை ஓடத்திலேற்றி, ஹயக்கிரீவனைக் கொன்று வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுக்க எடுத்தது மச்ச அவதாரம். தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்துக்காக பாற்கடலைக் கடைந்தபோது, அதைத் தாங்க கடலடியில் போய் எடுத்தது கூர்ம (ஆமை) அவதாரம். இரண்யாட்சகனால் பாதாளலோகத்திற்கு கவர்ந்து செல்லப்பட்ட பூமியை மீட்டு வெளிக் கொண்டுவர எடுத்தது வராக அவதாரம். தன் பக்தனான மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு அவனைப் பாதாள லோகத்திற்கு போகச் செய்ய எடுத்தது வாமன அவதாரம். தன் பக்தன் பிரகலாதனைத் துன்புறுத்திய இரண்ய கசிபுவைக் கொல்வதற்காக எடுத்தது நரசிம்ம அவதாரம். ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் புதல்வனாகப் பிறந்து, 21 தலைமுறை க்ஷத்திரியர்களை அழிக்க எடுத்தது பரசுராம அவதாரம். இராவணன், கும்பகர்ணன் மற்றும் அரக்கர்களைக் கொன்று, முனிவர்களைக் காப்பாற்றி சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக எடுத்தது ராம அவதாரம். கம்சன், சிசுபாலன், தந்த வக்ரன் முதலிய அரக்கர்கள் நீண்டநாள் வாழ்ந்ததனால், அவர்களைக் கொன்று பூமி பாரத்தைக் குறைக்க எடுத்தது பலராம ஸ்ரீகிருஷ்ண அவதாரங்கள். கலியுகத்தில் அதர்மம் மேலிட்டு தர்மம் அழியும்போது அந்த தர்மத்தை மறுபடியும் நிலைநாட்ட பகவான் எடுக்க இருப்பது கல்கி அவதாரம்.

மற்ற அவதாரங்கள் :

பிரம்மச்சரியத்தை அனுஷ்டிக்கும் விரதத்தை விளக்கிக் காட்ட, நான்முகனை சரீரமாகக் கொண்டு அவரது புத்திரர்களாக அவதரித்தவர்கள் சனக, சனந்தன, சனத்குமார, சனத்சுஜாத (நால்வர்) அவதாரம்.

பாற்கடலிலிருந்து அமிர்தம் வெளிவந்த போது, அதை பாத்திரத்தில் எடுத்து தேவர்களிடம் கொடுப்பதற்காக எடுத்தது தன்வந்திரி அவதாரம்.

அத்திரி முனிவருக்கும் அனுசூயா தேவிக்கும் மகனாகத் தோன்றி, பிரகலாதனுக்கும், அலர்க்கனுக்கும் உபதேசிக்க எடுத்தது தத்தாத்ரேயர் அவதாரம்.

வேதங்கள் மிகவும் விஸ்தாரமாய் இருந்ததால், அவற்றை நான்காக வகுத்து பரவச் செய்யும் பொருட்டும், தருமங்களை எல்லாருக்கும் உபதேசிக்கும் பொருட்டும் எடுத்தது வியாச அவதாரம்.

புலனடக்கம் செய்து தவமியற்றுவது எப்படி என்பதை நிரூபிக்க எடுத்தது நர-நாராயணர்களின் அவதாரம்.

பக்தியே முக்கியம் என்ற பாஞ்சராத்ர சாஸ்திரத்தை விளக்குவதற்காக எடுத்தது நாரதர் அவதாரம்.

தன் தாய்க்கு நற்கதியடையும் வழிகளை உபதேசிக்க எடுத்தது கபில அவதாரம்.

ஒரு தேசத்தை நன்றாக ஆளும் விதத்தை ருசி என்னும் முனிவருக்கு விளக்கிக் கூற எடுத்தது யக்ஞ அவதாரம்.

ஸ்வாயம்பு மனுவின் பேரனுக்கு புத்திரனாகப் பிறந்து, தருமங்களை நிலைநாட்ட எடுத்தது ரிஷபதேவ அவதாரம்.

அசுரர்களை ஏமாற்றி தேவர்களுக்கு அமிர்தத்தைப் பங்கிட எடுத்தது மோகினி அவதாரம்.

அஹிம்சை தத்துவத்தை மறுபடியும் பூமியில் நிலைநாட்டி வேரூன்றச் செய்ய எடுத்தது புத்தர் அவதாரம்.

தவ முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கொடியவனான வேனனை அழிக்க எடுத்தது பிருது அவதாரம்.

எந்தெந்த சமயத்தில் தர்மம் மறைந்து அதர்மம் மேலோங்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதாரம் எடுப்பார்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar