குமார சஷ்டி, சஷ்டி விரதம்: முருகனை வழிபட நல்லதே நடக்கும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூன் 2023 12:06
வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள் சஷ்டி திதி. ஆனி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டிக்கு குமார சஷ்டி என்று பெயர். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. சஷ்டி விரதமிருப்பவருக்கு குழந்தைப்பேறு உண்டாகும். இன்று காலை, மாலை கந்தசஷ்டி கவசம் படிப்பது எல்லா நன்மையும் தரும்.
சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம் பெறுகிறது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன் என்றும் இதற்குப் பொருள். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் மகிழ்ச்சியுடன் நன்மையளிக்கும். வாழ்வில் எல்லா செல்வங்களும் உண்டாகும். மன்மதன் போல அழகுடன் திகழ்வர் என கந்தசஷ்டிகவசம் கூறுகிறது. இன்று காலை, மாலை கந்தசஷ்டி கவசம் படிப்பது எல்லா நன்மையும் தரும்.