* பிரமாண்ட புராணத்தில் படைப்புக்கடவுளான பிரம்மா அரசமரத்தின் சிறப்புகளை விளக்கியுள்ளார். * இந்த மரத்தின் தெற்கில் சிவபெருமான், மேற்கில் மகாவிஷ்ணு. வடக்கில் பிரம்மாவும், கிழக்கில் தேவர்களும் குடியிருக்கின்றனர். * அரசமரத்தை மூன்று முறை சுற்றினால் மும்மூர்த்திகள், முப்பத்து முக்கோடி தேவர்களை வணங்கிய பலன் கிடைக்கும். * குழந்தை வரம் வேண்டி பெண்கள் அரசமரத்தை வலம் வருவது வழக்கம். ஆண்களும் சுற்றி வந்தால் நன்மை உண்டாகும். * சூரியன் மறைந்த பிறகு இதைச் சுற்றக்கூடாது. * திங்கள், சனிக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பு.