மனித உடல் தத்துவத்தை எல்லோரும் உணருமாறு சிதம்பரம் கோயிலை வடிவமைத்துள்ளனர். சான்றிற்கு... மனித உடலை 72000 நாடிகள் இணைக்கிறது என்றும் ஒருநாளைக்கு 21600 முறை சுவாசிக்கிறோம் என்கிறது மருத்துவம். அதை உணர்த்துவதற்காக நடராஜர் அருள்பாலிக்கும் பொன்னம்பலத்தில் 21600 தகடுகள் பொருத்த 72000 ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஞானிகளில் ஒருவரான திருமூலர் மானிட வடிவத்தை சிதம்பரம் தலத்தோடு ஒன்று படுத்தி பாடி இருக்கிறார். இதோ அப்பாடல்... மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே