நடராஜ பெருமானிடம் தோல்வியடைந்த காளி இங்கு தில்லைக்காளியாக அருள் செய்கிறாள். நடராஜர் கோயிலுக்கு வடக்கே அமைந்துள்ள கோயில் இது. இங்கு காளிதேவிக்கு நல்லெண்ணெயால் மட்டுமே அபிஷேகம் நடக்கும். அபிஷேகம் முடிந்ததும் அம்மனுக்கு குங்குமத்தினால் அலங்காரம் செய்து பூஜை நடத்துவர். அப்போது பக்தர்கள் இவளிடம் வைக்கும் குறைகளை உடனே நிவர்த்தி செய்கிறாள்.