மூன்று தேவியர் தரிசனம் பராசக்தியை வழிபட்டால் சங்கடங்கள் தீரும் என்கிறார் மகாகவி பாரதியார். அந்த பராசக்தியே சென்னை திருவேற்காட்டில் கருமாரி அம்மனாகவும், மாங்காட்டில் காமாட்சி அம்மனாகவும், குன்றத்துாரில் காத்யாயனி அம்மனாகவும் வெவ்வேறு பெயரில் ஒரே வரிசையில் 12 கி.மீ., துாரத்திற்குள் குடிகொண்டிருக்கிறாள். இக்கோயில்களுக்கு ஒரே நாளில் செல்வதோடு ஒவ்வொரு கோயிலிலும் மூன்று தீபம் ஏற்றி வழிபடுவதை திரிசக்கர தரிசனம் என்பர். நீங்கள் செல்லும் கிழமைக்கேற்ப வழிபாட்டின் பலன் அமையும். * முயற்சியில் வெற்றி, வியாபார வளர்ச்சி – ஞாயிறு * சொந்த வீடு அமைய – செவ்வாய் * லட்சுமி கடாட்சம் பெற – வெள்ளி * வழக்கு பிரச்னை தீர, குழந்தைப்பேறு கிடைக்க – சனி * செயலில் தடைகள் மறைய – பவுர்ணமி * தீயசக்திகள் விலக – அமாவாசை