வசிஷ்டருடைய ஆஸ்ரமத்துக்கு ஒரு அரசர் வந்தார். வசிஷ்டரின் தவ வலிமையைப் பார்த்து தாமும் தவவாழ்வு மேற்கொள்ள விரும்பினார். அரசபோகத்தைத் துறந்து காட்டிலே தங்கி தவம் புரிந்தார். அங்கே மேனகை என்னும் தேவலோகப் பெண்ணைக் கண்டு மயங்கினார். அதனால் தவசக்தியை இழந்தார். காட்டில் இருந்த மற்ற முனிவர்கள் அவரிடம், மேனகையை மறந்து மீண்டும் கடும்தவம் புரிந்தால், இழந்த சக்தியை பெறலாம் என அறிவுறுத்தினர். அவரும் அவ்வழியில் நடந்து அவளை மறந்து ஞானியானார். எனினும் அவரிடம் ‘தான்’ என்ற அகங்காரம் இருந்ததால் வசிஷ்டர் முதலிய ரிஷிகள் பிரம்மரிஷியாக அவரை ஏற்கவில்லை. ஒரு சூழலில் அந்த எண்ணம் அகன்றது. பின் ‘உலகின் உற்ற நண்பன்’ என்ற பொருளில் ‘விஸ்வாமித்திரர்’ என்ற பட்டம் வழங்கினர். உண்மையான தவம் இருந்தால் கெட்ட பின்னும் ஞானியாகலாம்.