படைப்புக் கடவுளான பிரம்மா தினமும் மகாவிஷ்ணுவை பூஜிப்பது வழக்கம். பூஜைக்கு தேவையான மலர்கள் தேவலோகத்தில் கிடைக்காது. மணம் மிக்க மலர்கள் பூலோகத்தில் மட்டுமே உண்டு. அங்கு சென்று, தினமும் பூப்பறிக்க சங்குகர்ணன் என்பவனை நியமித்தார். சங்குகர்ணனை இங்கே அனுப்ப மற்றொரு காரணமும் உண்டு. சங்குகர்ணன் பூலோகம் வந்த சமயத்தில், மக்களிடம் பக்தி குறைந்து தீய செயல்களைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்திருந்தது. அவர்களிடையே அந்த எண்ணத்தை மறையச் செய்து, பக்திப்பயிர் தழைக்கும் விதத்தில், கிருதயுகத்தில் பிரகலாதன், துவாபரயுகத்தில் பாகலீகராஜா, கலியுகத்தில் வியாசராஜர், ராகவேந்திரர் என தொடர்ந்து நான்கு பிறவிகளை எடுத்து ஹரிபக்தராக வாழ்ந்து காட்டினார்.