ஆடி மாதத்தின் கண்ணாக போற்றப்படும் ஆடி முதல் வெள்ளி; அம்பிகையை பூஜிப்போம்.. அதிக வரம் பெறுவோம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2023 09:07
ஆடிமாதத்தின் கண்ணாக போற்றப்படும் ஆடி செவ்வாயும், ஆடி வெள்ளியும் அம்பிகை வழிபாட்டுக்குரிய சிறப்பு நாட்களாகும். ஆடி வெள்ளியில் கூல் காய்ச்சி அம்மனுக்கு படையலிட்டு வழிபடுவது சிறப்பு. வீட்டில் மாலையில் ஐந்து முக தீபமேற்றி அம்பிகையை வழிபட வேண்டும். மங்கலப்பொருட்கள் தானம் அளித்தால் துன்பம் நீங்கி நன்மை உண்டாகும். ஆடிவெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்கையம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் குழுக்களாக அம்மனுக்கு 108, 1008 விளக்குப் பூஜைகளைச் செய்யலாம். இதனால் ராகுதோஷம் நீங்குவதோடு விரைவில் மணமாலை சூடும் யோகம் அமையும்.