அஷ்டமி விரதம்; கால பைரவரை வழிபட கடன்தொல்லை நீங்கும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2023 10:08
காலபைரவர் சிவ அம்சம் கொண்டவர். எதிரிகளுக்குப் பயம் தந்து அருள் செய்வதால் பைரவர் எனப்பட்டார். பைரவரை அஷ்டமி நாளில் வழிபடுவது சிறப்பு. சிவப்பு நிற மலர்களால் பைரவரை வழிபட்டால் சகல தோஷமும் நீங்கும். இன்று பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல் சிறப்பைத்தரும். வருடம் முழுக்க வரும் பன்னிரு அஷ்டமிக்கும் தனித்தனி பலன்களும் உண்டு. இந்த நாளில் காலையில் சிவபெருமானையும், மாலை சூரிய அஸ்தமான நேரத்தில் பைரவரையும் தரிசிப்பதும் பின்வரும் பயன்கள் கிடைக்கும்.
1. சித்திரை - மனக்குழப்பம் தீரும், தம்பதிகள் ஒற்றுமை ஏற்படும் 2 வைகாசி - கடன் சுமை தீரும் 3. ஆனி - கல்வியில் மேன்மை அடையலாம். 4. ஆடி - லட்சுமி கடாட்சம் பெருகும். 5. ஆவணி - நவகிரகதோஷம் விலகும். 6. புரட்டாசி - ஆயுள் விருத்தி உண்டாகும். பித்ரு தோஷம் விலகும். 7. ஐப்பசி - சகோதர பகை நீங்கி ஒற்றுமை ஏற்படும். 8. கார்த்திகை - தனவரவு ஏற்பட்டு செல்வம் பெருகும் 9. மார்கழி - தொழில் விருத்தி அடையும். 10. தை - மனபயம் விலகும், உயர் பதவி கிடைக்கும். 11. மாசி - போட்டிகளில் வெற்றி பெறலாம். 12. பங்குனி - திருமணத்தடை உள்ளிட்ட தடைகள் யாவும் விலகும்.