காயத்ரி ஜபம் ; சிறிய மந்திரம் தான்.. 100 மடங்கு பலன் கிடைக்கும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2023 10:08
கிருஷ்ணர் கீதையில் நதிகளில் நான் கங்கையாகவும், மலைகளில் விந்தியமாகவும், மந்திரங்களில் காயத்ரியாகவும் இருக்கிறேன் என்கிறார். காயத்ரி மந்திரத்தை, மந்திரங்களின் கிரீடம் என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஜே.பி,எஸ். ஹால்டேன் என்ற விஞ்ஞானி, “இந்த மந்திரம் ஒவ்வொரு ரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் பொறிக்கப்பட வேண்டும்,” என்கிறார். ராமகிருஷ்ணர் கூறுகையில் பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதைக் காட்டிலும், காயத்ரி மந்திரத்தை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம் தான். ஆனால் மிக மிக சக்தி வாய்ந்தது என்கிறார். ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர், “காயத்ரி மந்திரம் 1000 அணுகுண்டுகள் வெடித்தால் வெளிப்படும் சக்திக்கு சமமானது,” என்கிறார். காந்திஜி, “யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கிறாரோ அவர் நோய்க்கு ஆளாக மாட்டார்,” என்கிறார். இன்று காயத்ரி மந்திரத்தை ஜபித்து 100 மடங்கு பலனை பெறுவோம்.